Featured post

Kadhal Reset Repeat Movie Review

Kadhal Reset Repeat Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadhal reset repeat படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்க...

Friday, 6 March 2026

Kadhal Reset Repeat Movie Review

Kadhal Reset Repeat Tamil Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம kadhal reset repeat படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது A L vijay . இந்த படத்துலமதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன்  னு பலர் நடிச்சிருக்காங்க. சோ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போலாம்.


இந்த படத்தோட கதை switzerland  ல நடக்கற மாதிரி காமிச்சிருக்காங்க. படத்தோட ஆரம்பத்துலயே jiya க்கு love failure ஆயிடுற மாதிரி காமிச்சிருக்காங்க. அந்த வலியை தாங்கிக்க முடியாத அவங்க ஒரு பெரிய மலை ல கீழ விழந்துடுறாங்க. இவங்கள இதுல இருந்து காப்பாத்துறது madhumkesh. jiya க்கு கடந்த ரெண்டு வருஷத்துல நடந்தது எதுவுமே ஞாபகம் இருக்காது அதுனால madhumkesh நான் தான் உன்னோட lover னு jiya கிட்ட சொல்லிடுறாரு. அதுமட்டுமில்ல jiya night தூங்கி மறுநாள் எந்திரிக்கும் போது போன நாளுல என்ன நடந்துச்சு ன்றதை மறந்து போயிடுறாங்க. இவங்க ரெண்டு பேரையும் M S baskar அவரோட வீட்ல தான் தங்க வச்சிருப்பாரு. இவருக்கு ரொம்ப late அ தான் தெரியும், madhumkesh jiya ஓட lover கிடையாது னு. madhumkesh சின்ன வயசுல இருந்து jiya வை one side அ love பண்ணிட்டு இருந்திருப்பாரு, jiya ஓட life ல நல்லது நடக்கணும் ண்றதுக்காக தான் இப்படி பொய் சொல்லிருப்பாரு. இதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு? jiya ஓட love ஜெயிச்சுச்ச? இல்ல madhumkesh ஓட love ஜெயிச்சுச்ச ? ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு. 


படத்தோட first  half ல madhumkesh  jiya  சந்தோசமா இருக்கணும் ண்றதுக்காக பண்ணுற விஷயங்கள் னு எல்லாமே emotional  அ நகருது. second  half  ல comedy , emotional , ஒரு feel  good scenes னு குடுத்து ரொம்ப interesting  அ எடுத்துட்டு போயிருக்காரு டைரக்டர். முக்கியமா second  half ல வர ashok  arjunan அப்புறம் M S baskar ஓட scenes  எல்லாம் super அ இருந்தது. 

படத்துல நடிச்சிருக்க actors ஓட performance னு பாக்கும்போது jiya ஓட நடிப்பை பத்தி சொல்லியே ஆகணும். என்னதான் படத்துல ரெண்டு hero இருந்தாலும் heroine கதையை தான் நகருது. மறதி ல இருக்கிறது, emotional ஆகுறது னு எல்லா scenes ளையும் அவ்ளோ super அ நடிச்சிருக்காங்க. madhumkesh க்கு இது தான் முதல் படம். இவரோட நடிப்பு நல்ல இருந்தது ஆனா இன்னும் கொஞ்சம் பதட்டம் இல்லாம நடிச்சிருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். ashok arjunan ஏற்கனவே மலையாள படங்கள் ல நடிச்சு famous ஆயிருக்காரு. இந்த படம் மூலமா tamil cinema ல அறிமுகம் ஆகுறாரு. இவரோட character க்கு இன்னும் detailing குடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். மறந்து போன jiya கிட்ட நான் தான் உன்னோட lover னு சொல்லி prove பண்ண try பண்ணுறது english தெரியாத bouncers கிட்ட பேச try பண்ணுறது னு இந்த scenes எல்லாம் audience அ சிரிக்க வைக்குது.   


படத்தோட technical aspects னு பாக்கும்போது aravind krishna ஓட cinematography colourful ஆவும் bright ஆவும் இருந்தது. harris jeyaraj ஓட music and bgm இந்த கதைக்கு soulful அ இருந்தது. மொத்தத்துல ஒரு நல்ல கதைக்களம் தான் இது. சோ miss பண்ணாம இந்த படத்தை theatre ல போய் பாருங்க.

No comments:

Post a Comment