Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Monday, 15 March 2021

மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை

மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்


தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் ஆலயம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான 3ஆவது மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Focuz Sports Academy-FSA நடைபெற்றது. 
 
 


























 

இந்த போட்டியில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின்  துணை தலைவர் கிருபாகர ராஜா பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார் இவருடன் பொது செயலாளர் திரு ஆனந்த ஜோதி, பொருளாளர் திரு விஜயசாரதி மற்றும் சென்னை பாரா விளையாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ( போட்டி ஒருங்கிணைப்பாளர்) திரு. கணேஷ் சிங் அவர்கள் உடன் இருந்தனர் 

மேலும், இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற சரவணன், கிருஷ்ணமூர்த்தி, சுதாகர், வேல்முருகன், முருகன், ராமச்சந்திரன் , வெங்கடேஷ் பிரசாத் ஆகிய 7 வீரர்கள் மற்றும் கோமதி, கஸ்தூரி ஆகிய 2 வீராங்கனைகள் என மொத்தம் 9 பேர் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். தேர்வான 9 வீரர், வீராங்கனைகள் அனைவரும், வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெறும் தேசிய அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

No comments:

Post a Comment