Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Tuesday, 30 March 2021

தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வேலம்மாள்

 தேசிய அளவிலான சதுரங்கப்   போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி
தங்கப்பதக்கம் வென்றார்


இந்திய கிராமப்புற இளைஞர் விளையாட்டுக் கூட்டமைப்பு
ஏற்பாடு செய்திருந்த ஏழாவது தேசிய பெடரேஷன் கோப்பை சதுரங்கப் போட்டி 2020 21 கோவாவில் உள்ள அஞ்சுனா என்னுமிடத்தில் 26 .3 .2021 முதல் 28.03.2021 வரை நடைபெற்றது.



இப்போட்டியில் கலந்து கொண்ட மேற்கு முகப்பேர் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவியும் மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றவருமான
மாணவி B.திரிஷா போட்டியின் 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார் .

தேசிய அளவிலான இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் தாளாளர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார். மேலும் மாணவி எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெறவும் தனது இலட்சிய இலக்குகளை அடையவும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment