Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Tuesday, 16 March 2021

நடிகை சஞ்சனா சிங்கின் புது அவதாரம்...

 நடிகை சஞ்சனா சிங்கின் புது அவதாரம்...

ரேணிகுண்டா படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.

வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார். 

தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா. 

யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார். 























நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர். 

இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, நடிகர் பரணி, பெசண்ட் ரவி, சம்பத், கயல் தேவராஜ், மாஸ்டர் ஸ்ரீதர்,  மாஸ்டர் ராதிகா, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். 

இயக்குநர் பாக்கியராஜ் குறிப்பிடும்போது, " சஞ்சனா ரொம்ப நல்ல மனுஷி. எந்த வேலை எடுத்துக்கிட்டாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். யம்மியோஷாங்கிற இந்த உணவகத்தின் சுவை நன்றாக உள்ளது. இதேபோல் பல கிளைகள் திறந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்." என்றார். 

சஞ்சனா கூறும்போது, " இந்த கொரானா காலகட்டத்தில் தான் உணவின் தேவையை உணர்ந்தேன். நான் மட்டுமல்ல... உலகமே உணர்ந்தது. சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாம் ஏதாவது இன்னொரு தொழிலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணினேன். 

நம்மில் பலர் சினிமா மட்டுமே என இயங்கி வாய்ப்புகள் இல்லாதபோது திணறிவிடுகிறோம். இந்த சினிமாவில் தைரியமாக பாதுகாப்பாக இயங்க இன்னுமொரு நிரந்தர வருமானமுள்ள தொழிலை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது என நினைத்தே இந்த யம்மியோஷா திட்டத்தை தொடங்கினேன். என்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட் பங்குதாரராக இணைய இதைத் தொடங்குவது சாத்தியமாயிற்று. நடிப்பில் முழுக்கவனம் செலுத்தும் அதேவேளையில் இந்த யம்மியோஷாவையும் சிறப்புற நடத்த முனைவேன்.. அதற்கான உழைப்பு என்னிடம் இருக்கிறது  " என்றார். 

முன்னதாக, பெசண்ட் ரவி ரிப்பன்  வெட்டி திறந்துவைத்தார்.

No comments:

Post a Comment