Featured post

Vangala Viriguda Movie Review

Vangala Viriguda Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம vangala viriguda படைத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக...

Wednesday, 10 March 2021

வேலம்மாள் பள்ளி மாணவி "ராபா உலக சாதனைப் புத்தகத்தில்

 வேலம்மாள் பள்ளி மாணவி "ராபா உலக சாதனைப் புத்தகத்தில்" 
தனது முதல் சாதனையை அரங்கேற்றினார்


2021 மார்ச் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று  காரம்பாக்கம்
வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அப்பள்ளியின் மழலையர் வகுப்பு (எல்.கே.ஜி) மாணவி வி.லட்சிதா ஸ்ரீ,(வயது நான்கு)
மிகக்குறைந்த கால அளவில் அதிகபட்சமாக 70 காகித முயல்களை உருவாக்கினார். இதன் மூலம் இளைய வயதில் இந்த சாதனையைச் செய்த இளம் சாதனையாளராக


" ராபா உலக சாதனைப் புத்தகத்தில்" இடம்பெற்றார்.
 இந்த உலக சாதனையை ராபாவின் மீடியாவான  ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையொட்டி நடைபெற்ற பாராட்டு  விழாவில், அவருக்கு வெள்ளிப் பதக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டப்பட்டார்.
 அவரது குறிப்பிடத்தக்க சாதனையைப் பள்ளி நிர்வாகம் பாராட்டியது.


No comments:

Post a Comment