Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Monday 11 July 2022

வேலம்மாள் பள்ளியில் வியப்பூட்டும் வகையில் செயற்கை

 வேலம்மாள் பள்ளியில் வியப்பூட்டும்   வகையில் செயற்கை 

நுண்ணறிவு  பயிற்சி முகாம் !


    சென்னை  முகப்பேரில் அமைந்துள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் ஜூலை 6-2022 அன்று CNR வளாகத்தில் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் திரு.முத்துராஜ் மற்றும் Robotics Foundation of Tamil Nadu சங்கத்தின் தலைவர் திரு.பாலாஜி அவர்களும் Village Technology School நிறுவனத்தின் துணை நிறுவனர் திரு.பாலாஜி வரதன் அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் பார்வையாளராக 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பாலாஜி அவர்கள் செயற்கை நுண்ணறிவின் விழிப்புணர்வு மற்றும் 21- ஆம் நூற்றாண்டின் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் மற்றும் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி விளக்கினார். இவரைத் தொடர்ந்து பாலாஜி வரதன் அவர்கள் ultra Sonic Sensor மற்றும் Blue tooth Module கொண்டு SMART DUST BlN செய்யும் முறையை தொழில்நுட்ப பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியின் இடையே மாணவர்கள் தாங்கள்  புத்தாக்கப் பயிற்சியில் செய்த படைப்புகளைத் தலைமையாசிரியருக்கும் நிறுவனருக்கும் பரிசு அளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக திரு.பாலாஜி வரதன் அவர்கள் பள்ளியில் அமைந்துள்ள INNOVATION LAB மூலமாக பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படும் சிறப்பினைக் கூறி
நிகழ்ச்சியை இனிதே நிறைவேற்றினார்.

No comments:

Post a Comment