Featured post

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event   Chennai, 5 December 202...

Saturday, 18 April 2020

கோவிட் -19 க்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின்

கோவிட் -19 க்கு திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் பதில் செயல்

கோவிட் -19 தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு அமலாகி நான்கு வாரங்கள் ஆன நிலையில், இத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில்  மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளை கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் முன்வைத்தார்.




கல்லூரியின் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தில் முப்பரிமாண அச்சு 
தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த விலையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய 
முகக்கவசங்களை தயாரிக்க கல்லூரியானது தயாராக உள்ளது. மேலும் IoT- 
அடிப்படையிலான ஸ்மார்ட் வென்டிலேட்டரை வடிவமைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது. இவை ஜூலை மாதத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி தொழிலாளர்களான பாதுகாவலர்கள் மற்றும் சுகாதார  ஊழியர்களுக்கு 
முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. பேராசியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 
துணியால் ஆன முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணியும் தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொலைகண்காணிப்பு மூலம் வளாகம் முழுதும் கோவிட் -19 வழக்குகளைக் கண்டறிந்து தகவல்களை சேகரித்துக்   
கண்காணிக்க பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் மன அழுத்தம் சார்ந்த பிரச்னைகளைக் கையாள உளவியல் நிபுணர் ஒருவரும் 
ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி ஹாண்ட் சானிடைசரைத் தயாரித்த முதல் கல்வி நிறுவனங்களில் என்ஐடி திருச்சிராப்பள்ளியும் ஒன்றாகும். சமூக விலகல் கட்டாயமாக்கப்பட இக்காலகட்டத்தில், மாணவர்களுக்கும் 
பேராசியர்களுக்கும் தேவையான பொருட்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே 
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாடங்களை இணையம் மூலமாகவே 
கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இணையவழியில் தேர்வுகளை 
நடத்தி மாணவர்களை மதிப்பிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் 
ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நவீன தீர்வுகளைக் 
கண்டறியவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

For more details Contact:

Dr. M. Duraiselvam,Dean (Planning and Development) M.No.9486001166

Dr.Priyanka,Medical Officer M.No.9486001137

No comments:

Post a Comment