Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Tuesday, 2 November 2021

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா

 மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் *பாயும் ஒளி நீ எனக்கு* . *விக்ரம் பிரபுவின்* அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது

 *வாணிபோஜன்* கதாநாயகியாக 

நடிக்கிறார். வில்லனாக கன்னட  நடிகர் *தனன்ஜெயா*  நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை **கார்த்திக் அத்வைத்* * இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங் களிலும் பணிபுரிந்து இருக்கிறார்.  ஒளிப்பதிவு ஸ்ரீதர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சாகர். தேசிய விருது பெற்ற கோத்தகிரி






வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் படக் குழுவினர் கலந்துகொண்டனர். 

*நடிகர் விக்ரம் பேசியதாவது:* 

கொரோனா என்ற காலகட்டத்தில் ஒரு விஷயத்தை எடுத்துமுடிப்பது என்பது எவ்வளவு கஷ்டம் என்பது  எல்லோருக்கும் தெரியும். அதுவும் உச்சகட்டத்தில்தான் இந்த படம் அமைந்தது. இதில் நிறைய விஷயங்கள் நடந்தது. நல்ல விஷயம் என்னவென்றால் இயக்குனர் கார்த்திக் அப்போ பேசிய தமிழை விட இப்போது பேசிய தமிழ் நன்றாக இருந்தது. இப்போது பேசியது புரிகிறது அப்போது புரிவது ரொம்ப கஷ்டம். இதற்காக கொரோனா காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் என்ன எதிர்ப்பார்ப்பார்கள் என்பதை ஒரு டைரக்டராக இல்லாமல் ஒரு ரசிகராக இருந்து பார்த்து காட்சிகளை அமைத்திருக்கிறார்.அவருடன் பக்க பலமாக இருந்த கோ டைரக்டர் ஹரேந்தர் மற்றும் இயக்குனர்கள் குழுவுக்கு பாராட்டுக்கள். 

பாயும் ஒளி நீ எனக்கு பெரிய படம்.  இந்த படத்தில் இயக்குனர் பணியும் ஒளிப்பதிவாளரின் பணியும் நன்றாக இருந்தது.எல்லா விஷயத் தையும் நிறைவாக செய்திருக்கிறார்கள். இப்படத்தில் லைட் என்ற  விஷயம் மிக முக்கியம் அதை மிக அற்புதமாக செய்திருக்கிறார் ஸ்ரீதர். அதனை உடனிருந்து நான் பார்த்தேன். 

மற்ற நடிகர்களுடன் நடிப்பது ரொம்பவே நல்ல விஷயம். இதில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரிடம் எப்போதும் ஒரு பாசிடிவ் எனர்ஜி இருக்கும். நிறைய பாசிடிவ் எண்ணம் கொண்டவர்கள் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். எந்நேரமும் வாணி சிரித்த முகத்துடன் இருப்பார். அவருடைய அமைதியான முகத்தை பார்க்க நன்றாக இருக்கும்.  

எல்லா டெக்னிஷீயன்களுக்கும் நன்றி தயாரிப்பாளர் குமாரசாமி பத்திக்கொண்டா. பிரமாண்ட செலவில் படம் தயாரித்திருக்கிறார். இசையமைப்பாளர் சாகர் செய்திருக்கும் பாடல்களும் நன்றாக இருக்கிறது. ராப் பாடல் எல்லாருக்கும் நன்றாக பிடிக்கும். பொதுவாக ஆக்‌ஷன் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த படத்தில் ஆக்‌ஷன் மிக வித்தியாசமாக இருக்கும் தினேஷ் மாஸ்டர் சண்டைகள் அமைத்திருக்கிறார். எல்லாருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு நடந்த நேரத்தில் இங்கு தேர்தல் நடந்தது. அதனால் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த பரபரப்பிலும் எடிட்டிங் டீம் நன்றாக பணியாற்றியது. 

இந்த கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் பாதுகாப்பு விஷயங் களை பின்பற்றுங்கள்.

இவ்வாறு விக்ரம்பிரபு பேசினார்.  


 *படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:* “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது.  படம் நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளருக்கு நன்றி. விக்ரம் பிரபு சார் கடின உழைப்பை தந்திருக்கிறார். வாணிபோஜன் மற்ற நட்சத்திரங்கள், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசை அமைப்பாளர் சாகர் எல்லா டெக்னிஷியன்களும் சிறப்பான பணி அளித்திருக்கிறார்கள். இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவு இப்படத்திற்கு தர வேண்டும்

 *ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்:* பரியேறும் பெருமாள் படத்தில் பணியாற்றினேன். அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அடுத்தடுத்து எந்த மாதிரியான படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது. எனவே வழக்கமான படங்களை செய்ய எண்ணுவதில்லை. ஆனால் எல்லோரும் நல்ல இண்ட்ரஸ்டிங் கான கதைகள் சொல்கிறார்கள். 

கொரோனா காலகட்ட இடைவேளையில் தான் இயக்குனர் கார்த்திக் என்னை தொடர்புகொண்டு படம்  செய்யலாமா? என்றார். ஒப்புக் கொண்டேன். பாயும் ஒளி நீ எனக்கு பட கதையை கேட்டேன்.  விஜய் சார், அஜீத் சார் படம் போல் பெரிய படமாக இருந்தது. இது ஆக்‌ஷன் படம். எல்லா ஒளிப்பதிவாளருக்கும் ஒரு ஆக்‌ஷன் படம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு நன்காவது படத்திலேயே இப்படி அமைந்தது. நம்பவே முடியவில்லை நன்றாக தயாராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இயக்குனருடன் நல்ல நட்பு இருந்தது. இருவரும்  படம் எப்படியெல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பேசினோம். வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படம் போல் இல்லாமல் உலக அளவிலான படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.  எங்கள் இருவரின் எண்ணம் ஒன்றுபோல் இருந்தது. அதற்கான படத்தில் லைட்டிங் எப்படி இருக்க வேண்டும், காஸ்டியூம் எப்படி இருக்க வேண்டும், புரடக்‌ஷன் டிசைன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்த்து செய்தோம். படத்தில் ஆறேழு சண்டை காட்சி கள் இருக்கும்.  அதுவும் ஒன்று போல் இருக்கக்கூடாது என்று எண்ணினோம். 

பாயும் ஒளி நீ எனக்கு படம் எடுப்பதற்கே மிகவும் கடினமான உழைப்பு தேவைபட்டது. மதியம் படப்பிடிப்பு தொடங்கினால் அடுத்த நாள் காலை வரை படப்பிடிப்பு நடக்கும்.  சென்னை வெயில் எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும் அதையும் பொறுத்துக்கொண்டுதான் எல்லோரும் பணியாற்றினர்கள். விக்ரம்பிரபுவின் ஆக்‌ஷன் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும். நடிப்பும் மிக நன்றாக இருக்கும் எல்லா கட்சிகளையும் ஒரே ஷாட்டில் முடித்துவிடுவார். அதனால் படக் குழுவினர் முதலிலேயே ஒத்திகை யெல்லாம் முடித்து தயாரான பிறகுதான் அவரை செட்டுக்கு அழைப்போம். அந்தளவுக்கு அவர் தொழில் நேர்த்தி கொண்டவர். அவர் நன்றாக செய்யும்போது மற்ற ஆர்ட்டிஸ்டுகளும் நன்றாக செய்து விடுவார்கள். விக்ரம் பிரபு எல்லாவற்றிலும் அக்கறை எடுத்து ஊக்குவிப்பார். 

வாணி போஜனும் மிகவும் ஈடுபாடுடன் படப்பிடிப்பில் பங்கேற்றார் . அவருக்கு எனது குடும்பத்தினர் அனைவரும் ரசிகர்கள் அதனால் வீட்டிலிருந்து புறப்படும் போதே வாணி போஜனை அழகாக காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்புவார்கள். அவரை மிகவும் அழகாக காட்டியிருக்கிறோம். விக்ரம் பிரபு, வாணி  ஜோடி மிகவும் பொருத்தமாக அழகாக அமைந்திருக்கிறது.

படப்பிடிப்பில் கஷ்டத்தை பொருட் படுத்தாமல் நடித்தார்கள். 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. கடுமையான வெயில் தொடங்கி நல்ளிரவு முழுவதும் படப்பிடிப்பு நடக்கும். நாளொன்றுக்கு 18 மணிநேரம் தொடர்ச்சியாக நடித்துவிட்டு  மீண்டும் அடுத்தநாள் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள். இடையில் 2 மணி நேரம் மட்டுமே அவர்களுக்கு ஓய்வு இருந்தது. 10 நாட்களில் 240 மணி நேரம்தான் இருக்கும். அதில்  180 மணி நேரம் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம்.  இந்த நாட்களில் விக்ரம்பிரபு, வாணிபோஜன் கொடுத்த ஒத்துழைப் பால்தான் இதனை சாதிக்க முடிந்தது. அதுவும் ஆக்‌ஷன் காட்சியில் நடிக்கும்போது விக்ரம் பிரபுவுக்கு காலில் அடியெல்லாம் பட்டிருக்கும் அதையும் பொருட்படுத்தாமல் மறுநாள் வலியை வெளிக்காட்டாமல் காதல் காட்சியில் நடிப்பார். எல்லா படத்துக்கும் கடினமாக உழைப்பார்கள். இந்த படத்துக்கு மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். 

இவ்வாறு ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறினார். 

 *வாணிபோஜன் கூறியதாவது:* 

தயாரிப்பாளர் அவர்களுக்கு பெரிய நன்றி. இயக்குனர் கார்த்திக் என்னிடம் கதை  சொல்லவந்தபோது பாதி தெலுங்கு, பாதி தமிழில் கஷ்டப்பட்டு சொன்னார்.  அது புரிந்தது. அதே சமயம் அங்கிருந்து இங்குவந்து படம் செய்ய வேண்டும் என்று கடினமாக உழைத்திருக்கிறார். அவருக்கு பெரிய நன்றி. எந்த ஒரு படத்துக்கும் நான் காஸ்டியூம் மேக்கப் எல்லாம் அதிகம் பார்த்தது கிடையாது. ஆனால் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் காஸ்டியூமிலிருந்து மேக்கப்பிலிருந்து எல்லாவற் றையும் நுணுக்கமாக பார்த்தார். அதனால் நானும் ஆர்வம் காட்டினேன். அவருக்கும் நன்றி. 

விக்ரம் பிரபு ஸ்டார் குடும்பத்திலி ருந்து வந்தவர்.எப்படி இருப்பாரோ என்ன பேசுவாரோ என்று பயந்தேன். ஆனால் அவர் மிகவும் அன்பாக பழகினார். அவரிடம் பணியாற்றியது அவ்வளவு சவுகரியமாக இருந்தது.  எந்தவொரு பந்தாவும் அவரிடமில்லை.காதல் காட்சிகள் நடிக்கும் போதும் எதுவாக இருந்தாலும் கேட்டுவிட்டுதான் நடிப்பார். விவேக் பிரசன்னா இந்த படத்தில் ஒரு வேடம் செய்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மொத்த படக் குழுவுமே ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். விக்ரம் டே அண்ட் நைட் வேலை செய்திருக்கிறார். எல்லோருமே கடின உழைப்பு தந்திருக்கிறார்கள்.  இந்த படத்துக்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்

இவ்வாறு வாணிபோஜன் பேசினார். 

அனைவரையும் பி ஆர் ஒ டைமண்ட் பாபு வரவேற்றார். 

முன்னதாக மறைந்த நடிகர்கள் புனித் ராஜ்குமார், விவேக் ஆகியோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment