Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Monday, 1 November 2021

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் கர்ஜிக்க தயாரானது '

 *சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் கர்ஜிக்க தயாரானது 'ஜெய் பீம்'*


நடிகர் சூர்யா நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. ஆம், நாளை நவம்பர் 2 இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. சூர்யா ரசிகர்கள்  இத்திரைப்பட ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. 






தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, தன் கடமையைத் தாண்டியும் எப்படி போராடினார் என்பதற்கான சாட்சி  'ஜெய் பீம்'. அண்மையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் பல மொழிகளிலும் வெளியானது. இதற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பும் அளப்பரியது. படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு ட்ரெய்லரைப் பார்த்தே ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியாகிறது.

No comments:

Post a Comment