Featured post

Indian National Cine Academy (INCA) announced as a Pan-India Institution for Indian Cinema, a monumental vision to unite India’s cinematic powerhouses

 *Indian National Cine Academy (INCA) announced as a Pan-India Institution for Indian Cinema, a monumental  vision to unite India’s cinemati...

Monday, 8 November 2021

எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்!

 எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்! 


மக்கள் நீதி மய்யத் தலைவர் நம்மவர். திரு.கமல்ஹாசன் அவர்கள் பேச்சு. 


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக உரையாடினார். 


அப்போது அவர் பேசியதாவது, 


நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் சொன்னதைத்தான் இப்போதுதான் சொல்கிறேன் ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் அதைத்தான் என் பிறந்தநாள் செய்தியாகச் சொல்கிறேன். முடிந்தவரை சேவை செய்யுங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் வழிகாணுங்கள். இம்முறை பரவலாக நடைபெறும் நற்பணிகள் எல்லாருக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையட்டும் என்றார்.  


தொடர்ந்து, கோயம்புத்தூர் ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்தார். மநீம உறுப்பினர்கள் இந்தப் பள்ளி வகுப்பறைகளுக்கு  பெயிண்ட் செய்தும் கொடுத்திருந்தார்கள். 


இரண்டாம் கட்டளை கோவூர் பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அங்கு நிலவும் குடிநீர்ப் பிரச்சனைக்குத் தீர்வாக காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 


மதுரை ஒத்தக்கடைக்கு அருகேயுள்ள ஒரு  ஆரம்ப சுகாதார நிலையம் மின்சாரம் இல்லாமல் டார்ச்லைட் வெளிச்சத்தில் பிரவசம் பார்க்கவேண்டிய அளவிற்கு அவலத்தில் இருந்தது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெயிண்ட் அடித்து, காத்திருப்போருக்கான இடத்தையும் இங்கிலாந்துவாழ் எம்.என்.எம் நண்பர்கள் அமைத்துக்கொடுத்தார்கள். அதை நம்மவர்.கமல்ஹாசன் காணொளி மூலம் பார்வையிட்டார். 




முன்னதாக மநீம தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘ஐயமிட்டு உண்’ எனும் பெயரில் தமிழகம் முழுக்க உள்ள வறியவர்களுக்கு 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. டாக்டர் ரகுபதி தலைமையில் 75 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. 22,247 பேர் இதன் மூலம் பயனடைந்தனர். தமிழகம் முழுக்க இரத்த தான முகாம்கள், உடல் உறுப்பு தான முகாம்கள் நடத்தப்பட்டன. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு நம்மவர். திரு. கமல்ஹாசன் அவர்களின் முப்பரிமான சிலையுடன் கூடிய பலூன் விண்கலன் விண்ணில் ஏவியது. காற்று மாசுபாட்டினை ஆய்வு செய்வதற்குத் தேவையான தரவுகளை இந்த சாட்டிலைட் சேகரித்து திரும்பியது. 



No comments:

Post a Comment