Featured post

16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்...

 16வது   தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்... ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில...

Thursday, 14 May 2026

16வது தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்...

 16வது   தாதாசாகெப் பால்கே விருதை வென்ற ஃபிளாக் திரைப்படம்...



ஐ அண்ட் ஐ மூவிஸ் சார்பாக வைரப்பிரகாஷ் தயாரிப்பில் எஸ் பி பொன்சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 

ஃபிளாக்


இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வைர பிரகாஷ் கூறுகையில்..


140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வை ஒரு சிறுவன் மூலம் சொல்லும் திரைப்படம் தான் ஃபிளாக்


இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் எஸ்பி பொன்சங்கர், இசை ரவிவர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் , படத்தொகுப்பு வரதன்..


இப்படத்தில் புகழ் பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகர் மிக்கி மஹிஜா முக்கிய கதாபத்தில் நடித்திருக்கிறார், இவருடன் இட்லி கடை திரைப்படத்தில் சின்ன வயது தனுஷ் ஆக நடித்த தீஹான் மனதை நெகிழ வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் இவர்களுடன் அமீர் மாலிக், கிரீத்துவாரகேஷ், அபினவ் கே சாமி, பாபுஷா மற்றும் பலர் நடத்துனர்..


இப்படம் 140 கோடி இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை தூண்டிவிடும் திரைப்படமாக இருக்கும் இதற்கு சான்றாக தான் நேற்றைய பொழுது இப்படத்திற்காக 16வது   தாதாசாகெப் பால்கே விருதை பெற்றோம்..

இந்த விருதை என் கையால் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி என்றார்..


இந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் மேலும் ஒரு நிகழ்வாக தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி ஆகிய மொழியில் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் இப்படத்தின் டெய்லரை அவர்களின்  மொழியில் வெளியிட்டனர்.


மேலும் இத்திரைப்படம் நிச்சயமாக தேசிய விருதையும் தட்டி வரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்...

Wednesday, 13 May 2026

கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.

 கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்








தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார், மேலும் இப்படத்திற்க்காக x தலம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 


சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய“நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும் பல திரைப்படங்களில் குனச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் மாறுப்பட்ட வேடங்களிலும் பட்டைய கிளப்பியுள்ளார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்.


தற்ப்போது இயக்குனர் சற்குணம் எழுதி இயக்கிய, புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாகக் கொண்ட 'எக்ஸாம்', தைகாரா என்ற மலைப்பாங்கான, கற்பனையான ஊரில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான புலனாய்வு மோசடித் திரில்லர் ஆகும். இதில் போலீஸ் அதிகாரியாக மீண்டும் தன் நடிப்பை சிறப்பாகவும் மாஸாகவும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தொடர் வருகின்ற மே 15 2026 அன்று அமேஸான் ஃரைமில் வெளியாக உள்ளது. பார்வையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!

 *பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !!*



ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.


பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.


தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு  தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.


இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு A.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவற்றின் மூலம்  இத்திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது.


ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.


https://www.youtube.com/watch?v=xVyMza6j0Nk

ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 *'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்*





தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் 'வடசென்னை 2 ' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதியான இன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்... தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து ... இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.


இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் 'ஆடிஷன் ' செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்கு தடையின்றி கெட்ட வார்த்தையை பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஒரு அசாதாரணமான பணி என்றாலும்.. அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.


இந்த உரையாடல் பிரத்யேகமானதாகவும் மாறுகிறது. ஐஸ்வர்யா தனது கல்லூரி கால நினைவை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்த சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு.. தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளை தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணம் நேர்மையுடனும் , நகைச்சுவையுடனும் வெளிப்பட்டு... பார்வையாளர்களின் மனதை தொடுகிறது.


ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, 'ஆஃபீஸ் கானா' இசை குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த எபிசோட்.. புதிய தகவல்களையும், பொழுதுபோக்கையும் தடையின்றி ஒன்றிணைக்கிறது.


இந்த கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ஜாலி ஓ ஜிம்கானா நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள்... துருவ் விக்ரம் - ரவி மோகன் - மிர்ச்சி சிவா - பிரேம்ஜி அமரன் - ஹரிஷ் கல்யாண் - மகத் ராகவேந்திரா - வைபவ் ரெட்டி - அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி- சுதாகர் என பட்டியல் நீள்கிறது.


ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர்... ஒரு புதிய கதை ... முற்றிலும் தவற விட கூடாத நிகழ்ச்சி ஜாலி ஓ ஜிம்கானா..!


சன் நெக்ஸ்ட் - SUN NXT - பற்றி


சன் நெக்ஸ்ட் என்பது நாடு தழுவிய பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய பொழுதுபோக்கு தளமாகும். இது தமிழ் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட மொழிகளில் ...4000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ...44 க்கும் மேற்பட்ட நேரலை - தொலைக்காட்சி - அலைவரிசைகளை வழங்குகிறது. திரைப்படங்கள்.. தொலைக்காட்சி .. நேரலை மற்றும் முன்கூட்டிய அணுகலுக்கான சலுகைகள் என பல தரப்பட்ட உள்ளடக்கங்களுடன் சன் நெக்ஸ்ட் SUN NXT உயர்தரமான தென்னிந்திய பொழுதுபோக்கின் அடையாளமாக திகழ்கிறது.

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்;

 உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்;

ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி :








பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகன் அவர்களுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது.


பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார்.


இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகை ஆகியவை இடம்பெற்றன. கோவில் வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முன்னாள் MLA K. பாபு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட MLA K. பிரேமன், சுமீஷ் அச்சுதன், மாட்டனூர் சங்கரன்குட்டி, மாறார், பிரகாஷ் உள்ளியேறி, ராதாகிருஷ்ணன், நித்தின், கோவில் செயலாளர் தேவிதாஸ் மற்றும் அறங்காவலர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இந்த விழாவிற்கு கேரளா மற்றும் தமிழ் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டனர். ரவி மோகன் அவர்களின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது. விருதைப் பெற்றுக்கொண்ட அவர், கோவிலின் ஆன்மிக சூழலும், பல்லாஸனா பழையகாவு  பகவதி அம்மன் தேவஸ்தானம்  அமைப்பின் பாரம்பரியப் பெருமையும் குறித்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


விழாவை மேலும் கொண்டாட்டமயமாக்கியது பாடகி கெனீஷா அவர்களின் அதிரடி இசை நிகழ்ச்சி. தனது இசைக்குழுவுடன் மேடையேறிய அவர், சக்திவாய்ந்த குரல், உற்சாகமான மேடை நிகழ்வு மற்றும் ரசிகர்களுடன் கொண்ட நேரடி தொடர்பின் மூலம் அரங்கையே கொண்டாட்ட சூழலாக்கினார். மென்மையான மெலடிகளும், ஆற்றல் மிக்க பாடல்களும் கலந்த அவரது இசை நிகழ்ச்சி, ரசிகர்களை முழுமையாக ஈர்த்தது.


ஆன்மிகம், பாரம்பரியம், சினிமா மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த “உத்சவ் 2026”, சமீப ஆண்டுகளில் நடைபெற்ற மிகவும் நினைவுகூரத்தக்க விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளது. விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த ரவி மோகன் மற்றும் தனது இசை நிகழ்ச்சியால் விழாவை மேலும் உயர்த்திய கெனீஷா ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Ravi Mohan Honoured with Prestigious Devi Ratna Award at Utsav 2026; Keneeshaa Sets Stage Ablaze

 Ravi Mohan Honoured with Prestigious Devi Ratna Award at Utsav 2026; Keneeshaa Sets Stage Ablaze with Power-Packed Performance








Palakkad witnessed a spectacular confluence of devotion, culture, cinema, and music as the grand celebrations of “Utsav 2026” unfolded at the renowned Pallassana Pazhayakavu Sree Meenkulathi Bhagavathi Temple. The highlight of this year’s festivities was the presentation of the prestigious fourth Devi Ratna Award to actor Ravi Mohan, alongside a captivating live musical performance by singer Keneeshaa.

Instituted by the Pallassana Pazhayakavu Bhagavathy Devaswom Trust, the Devi Ratna Award recognises eminent personalities who have made outstanding contributions to art, culture, and public life. This year, the honour was bestowed upon Ravi Mohan in recognition of his remarkable performance in Ponniyin Selvan, his significant contributions to Tamil cinema, and the widespread admiration he enjoys among audiences.

The award carries a cash prize of ₹1,00,001, along with a golden insignia, citation, and a commemorative plaque. Ravi Mohan received the honour at a grand ceremony held at the Meenkulathi Temple grounds, in the presence of several distinguished dignitaries including former Nenmara MLA K. Babu, newly elected MLA K. Preman, Chittur MLA Sumeesh Achuthan, Mattanur Sankarankutty Marar, Prakash Ulliyeri, Surya Group Chairman Radhakrishnan, Managing Director Nithin, Temple Secretary Devidas, and Trustee Mahesh.

The event drew a massive gathering of devotees, cinema lovers, and cultural enthusiasts from across Kerala and Tamil Nadu. Ravi Mohan’s presence added immense prestige to the occasion, with fans turning out in large numbers to catch a glimpse of the popular actor. Receiving the honour, Ravi Mohan expressed heartfelt gratitude and spoke about the spiritual aura and rich cultural legacy of the Meenkulathi Temple and the Pallassana Pazhayakavu Bhagavathy Devaswom Trust. His words resonated deeply with the audience, making his appearance one of the most cherished moments of the evening.

Adding further vibrancy to the celebrations was singer Keneeshaa, who delivered an electrifying live performance along with her band. Her dynamic stage presence, powerful vocals, and engaging interaction with the crowd created an energetic and festive atmosphere. The musical set, blending soulful melodies and high-energy numbers, kept the audience enthralled throughout.

The Utsav 2026 celebrations successfully brought together spirituality, tradition, cinema, and entertainment, making it one of the most memorable editions in recent years. The organisers extended their gratitude to Ravi Mohan for gracing the occasion and to Keneeshaa for her enthralling performance, which together elevated the grandeur of the event.

Tuesday, 12 May 2026

*G. Devarajan Master Award 2026 - First Edition*

 *G. Devarajan Master Award 2026 - First Edition*







The “G. Devarajan Master Award 2026” - the first award will be presented to renowned Indian Carnatic musician Padmabhushan Dr.T. V. Gopalakrishnan by Smt. Leelamani Devarajan, beloved wife of G. Devarajan Master.


G. Devarajan (1927–2006), fondly known as Devarajan Master, was one of the greatest composers in Malayalam film music history, whose legendary collaborations with Vayalar Ramavarma defined a golden era of cinema music and earned him numerous honours including the prestigious J. C. Daniel Award.

The event will be graced by celebrated South Indian music director Gangai Amaran.


Two rare musical creations composed by Devarajan Master during his later years — Choir and Shadkala Pallavi — will be presented on this occasion.


Sixteen singers who directly learnt from Devarajan Master and rendered his compositions will present selected pieces from the iconic Shakthigatha Choir songs.


In addition, “Shadkala Pallavi,” a remarkable creation that reflects Devarajan Master’s profound command over Carnatic music, will also be performed on stage.

The presentation will be by K. Krishnakumar, who personally learnt this composition directly from the Master himself.

The event is organised by the family and aspirants of late G.Devarajan.


Venue: Bharatiya Vidya Bhavan Main Hall

Date: 17 May 2026, Sunday

Time: 5:30 PM


Entry Free

All are cordially welcome.


-l

ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு*

 *ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026 – முதல் பதிப்பு*







மலையாளத் திரைப்பட இசையின் மகத்தான இசை மேதையாக விளங்கிய G. Devarajan அவர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள முதல் “ஜி. தேவராஜன் மாஸ்டர் விருது 2026”, புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசைக் கலைஞர் T. V. Gopalakrishnan அவர்களுக்கு, தேவராஜன் மாஸ்டரின் அன்புத் துணைவியார் திருமதி Leelamani Devarajan அவர்களால் வழங்கப்படுகிறது.


1927 முதல் 2006 வரை வாழ்ந்த தேவராஜன் மாஸ்டர், மலையாளத் திரைப்பட இசை வரலாற்றின் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கவிஞர் Vayalar Ramavarma அவர்களுடன் இணைந்து உருவாக்கிய அற்புதப் பாடல்கள், மலையாளத் திரைப்பட இசையின் பொற்காலத்தை உருவாக்கியவை என்றும் கருதப்படுகின்றன. அவரது இசைப் பங்களிப்பிற்காக, கேரள அரசின் உயரிய திரைப்பட விருதான J. C. Daniel Award உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற தென்னிந்திய இசையமைப்பாளர் Gangai Amaran அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.


தேவராஜன் மாஸ்டர் தனது இறுதிக்காலத்தில் உருவாக்கிய அரிய இசை வடிவங்களான Choir மற்றும் ஷட்கால பல்லவி இந்நிகழ்வில் மேடையேறுகின்றன.


தேவராஜன் மாஸ்டரிடம் நேரடியாக பயின்று, அவருடைய இசைப்பாடல்களைப் பாடிய 16 கலைஞர்கள் இணைந்து, புகழ்பெற்ற சக்திகாதா Choir பாடல்களில் சிலவற்றை வழங்குகிறார்கள்.


மேலும், தேவராஜன் மாஸ்டரின் கர்நாடக இசை ஆழத்தையும் மேதைத்தனத்தையும் வெளிப்படுத்தும் அபூர்வ படைப்பான “ஷட்கால பல்லவி” மேடையில் அரங்கேறுகிறது. இந்த அபூர்வ நிகழ்வை, தேவராஜன் மாஸ்டரிடம் நேரடியாக இந்தப் படைப்பை கற்றுக் கொண்ட K. Krishnakumar அவர்கள் வழங்குகிறார்.


இந்த நிகழ்ச்சி தேவராஜன் மாஸ்டரின் குடும்பத்தினரும் அவரது இசை ஆர்வலர்களும் இணைந்து நடத்துகின்றனர்.


இடம்: Bharatiya Vidya Bhavan Main Hall

தேதி: 17 மே 2026, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 5.30


அனுமதி இலவசம்

அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.



Prime Video Unveils the Captivating Trailer of System, a Prime Original Movie that Navigates the Battle Between Power and Justice

 Prime Video Unveils the Captivating Trailer of System, a Prime Original Movie that Navigates the Battle Between Power and Justice*



Prime Original Movie, System, a gripping courtroom thriller, is directed by Ashwiny Iyer Tiwari and produced under the banner of Baweja Studios by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga. The movie is written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial


Featuring Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, System, it also features Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles


System will premiere exclusively on Prime Video in Hindi across India and over 240 countries and territories worldwide on May 22


MUMBAI, India—May 12, 2026—Prime Video, India’s most loved entertainment destination, today unveiled the gripping trailer of its upcoming Prime Original movie System, offering a powerful glimpse into hard-hitting social realities and questions a system where power defines truth. Directed by Ashwiny Iyer Tiwari and produced by Pammi Baweja, Harman Baweja, and Smitha Baliga, System captures the universal themes of ambition, revenge, fight for justice, and moral ethics. Written by Harman Baweja, Arun Sukumar, Ashwiny Iyer Tiwari, Tasneem Lokhandwala, and Akshat Ghildial, System features Sonakshi Sinha, Jyotika, and Ashutosh Gowariker in lead roles, supported by Preeti Agarwal, Adinath Kothare, Aashriya Mishra, Gaurav Pandey, and Sayandeep Gupta in pivotal roles. The movie will premiere exclusively on Prime Video in Hindi, across India and over 240 countries and territories worldwide on May 22.

 

The trailer for System opens with Neha, a determined young lawyer played by Sonakshi Sinha, taking on a tough challenge from her father (Ashutosh Gowariker) to be worthy of a partnership in his firm. To pull it off, she recruits Sarika (Jyotika) - a street-smart courtroom stenographer, who secretly harbors motives of her own. What follows is a fast-moving glimpse into intense courtroom battles, messy relationships, and some powerful moments. Hard-hitting dialogues like "Ameeri ke shor mein gareeb ki awaaz kho jaati hai" cut straight to the core conflict, and viewers are left to wonder, in a System where influence can outweigh truth, has Power killed Justice or does it still stand a chance? Find out when System premieres exclusively on Prime Video on May 22!

 

Ashwiny Iyer Tiwari, the director and co-writer of System shared, “As a filmmaker every story I have told is an act of bravery. Stories that inspire me creatively, break barriers  and sometimes they are deeply personal. System like all my movies shares similar values that challenges me to evolve with my craft with authenticity. Movies that I hope will  live beyond my lifetime. She further added, “I am immensely grateful that Prime Video along with Baweja Studios believed in my vision. With Sonakshi Sinha and Jyotika, two powerful actors at the heart of the narrative, I hope that System will not only entertain but also spark a conversation among viewers in India and around the world, when it premieres on Prime Video on May 22.”

 

Sonakshi Sinha, who plays Neha, an ambitious public prosecutor, shared, “Playing this character has been deeply rewarding. I’m always drawn to stories that challenge me as an actor, and Prime Video has given me the opportunity to explore diverse genres and themes—from Dahaad to now System. This original movie is more than just a legal drama; it reflects the society we live in, where justice can sometimes be as divided as the social structures around us. Ashwiny’s clear vision helped me bring out my best and I’m excited to see how audiences respond when System premieres on Prime Video on May 22.”

 

Known for her versatility, Jyotika, who plays the role of Sarika, a courtroom stenographer, said, “Portraying such a layered character in System was both exciting and challenging. The film explores the contrasts of modern India, where privilege and inequality coexist. Ashwiny brings a clear and engaging vision to the story, from well-developed characters to realistic settings. Being part of a Prime Original movie has been a great experience. Prime Video is known for sharing meaningful stories with audiences across India and globally, and I am glad System will reach so many people when it premieres on May 22.”


Link : 

https://www.youtube.com/watch?v=7dB5ne639ls

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்”

*அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!*



*ப்ரைம் வீடியோ  வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!*


தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான   “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.


ப்ரைம் வீடியோ  தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.


சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும்  அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில்,  ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


“சிஸ்டம்” திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியாவிலும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், பிரத்யேகமாக ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.


மும்பை, இந்தியா – மே 12, 2026 – இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும் இப்படம் முன்வைக்கிறது.


இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரித்துள்ளனர். பேராசை, பழிவாங்குதல், நீதி தேடும் போராட்டம் மற்றும் ஒழுக்கநெறி போன்ற உலகளாவிய கருக்களை மையமாகக் கொண்டு “சிஸ்டம்” உருவாகியுள்ளது.


டிரெய்லரில், நேகா என்ற இளம் வழக்கறிஞராக சோனாக்‌ஷி சின்ஹா அறிமுகமாகிறார். தனது தந்தையான மூத்த வழக்கறிஞர் (அஸ்தோஷ் கோவாரிகர் ) முன்னிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய சவாலில் அவர் ஈடுபடுகிறார். அதற்காக சரிகா என்ற கூர்மையான நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரை (ஜோதிகா) அவர் தனது அணியில் இணைத்துக்கொள்கிறார். ஆனால் சரிகாவுக்கும் தனிப்பட்ட நோக்கங்கள் இருப்பது பின்னர் தெரிய வருகிறது. அதன் பிறகு நீதிமன்றத்தில் நடக்கும் கடுமையான மோதல்கள், சிக்கலான உறவுகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் டிரெய்லரில் வேகமாக நகர்கின்றன.


“பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போய்விடுகிறது.” போன்ற தாக்கம் மிக்க வசனங்கள் படத்தின் மைய கருத்தை வெளிப்படுத்துகின்றன. “அதிகாரம் உண்மையை விட வலிமையானதாக இருக்கும் ஒரு அமைப்பில், நீதி இன்னும் உயிருடன் இருக்கிறதா?” என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. இதற்கான பதில் மே 22ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகும் “சிஸ்டம்” திரைப்படத்தில் கிடைக்கும்.


இப்படம் குறித்து இயக்குநரும் இணை எழுத்தாளருமான அஸ்வினி ஐயர் திவாரி கூறுகையில்..,


“நான் சொல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு தைரியமான முயற்சிதான். என்னை சவாலுக்கு உள்ளாக்கும் கதைகளே என்னை ஒரு படைப்பாளியாக வளர்த்திருக்கின்றன.  “சிஸ்டம்” திரைப்படமும் அதேபோல உண்மைத்தன்மையுடன் உருவான ஒரு படைப்பு. ப்ரைம் வீடியோ மற்றும் Baweja Studios ஆகியோர்  என் கற்பனையில் நம்பிக்கை வைத்ததற்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜோதிகா போன்ற வலிமையான நடிகைகள் இப்படத்தின் மையமாக இருப்பதால், இந்த படம் மக்களை வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.


நேகா என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில்..,


“இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். Dahaad படத்திற்குப் பிறகு சிஸ்டம் போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது ஒரு சாதாரண நீதிமன்ற நாடகம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் ஒரு படம்” என்றார்.


சரிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா  கூறுகையில்…,


“பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது சவாலானது, அதே நேரத்தில் உற்சாகமாக இருந்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவை இந்த படம் பேசுகிறது. அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட கண்ணோட்டத்துடன் இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். இந்த படம் இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் வரும் மே 22  மக்களை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

Link : 

https://www.youtube.com/watch?v=7dB5ne639ls

Monday, 11 May 2026

பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற

 *பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர்.ஆர்.சி.எம். விஷ்ணுபிரபு, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு.C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்*



சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு.C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பொறுப்பு  ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


 இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட திரு. விஷ்ணு பிரபு, அதன் பின்னர் முதலமைச்சர் திரு.C. ஜோசப் விஜயை தலைமைச் செயலகத்தில், நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.


 மேலும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்தும், தமிழ்நாடு மற்றும் பப்புவா நியூ கினியா நாடு இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்தும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்.


 இந்தச்சந்திப்பின் மூலம் தமிழ்நாடு மற்றும் பப்புவா நியூ கினியா இடையே வரத்தக உறவு மேம்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

DR. R.C.M. VISHNU PRABHU, TRADE COMMISSIONER OF PAPUA NEW GUINEA CONGRATULATED HON’BLE TAMIL NADU CHIEF MINISTER C. JOSEPH at CHIEF MINISTER’S Cabin

 *DR. R.C.M. VISHNU PRABHU, TRADE COMMISSIONER OF PAPUA NEW GUINEA CONGRATULATED HON’BLE TAMIL NADU CHIEF MINISTER C. JOSEPH at CHIEF MINISTER’S Cabin*



Dr. R.C.M. Vishnu Prabhu, Trade Commissioner of Papua New Guinea, personally met and congratulated Mr. C. Joseph Vijay Yesterday @ Secretariat of Tamilnadu in the office of 

Hon’ble Chief Minister.


The swearing-in ceremony was held at the Nehru Indoor Stadium in Chennai where Mr. C. Joseph Vijay officially took charge as the Chief Minister of Tamil Nadu. Governor Rajendra Vishwanath Arlekar administered the oath of office. This was attended by Dr. R.C.M. Vishnu Prabhu, Trade Commissioner of Papua New Guinea.


Following the ceremony, Dr. R.C.M. Vishnu Prabhu, Trade Commissioner of Papua New Guinea met Hon’ble Chief Minister of Tamil Nadu. C. Joseph Vijay in person at the Secretariat and extended his greetings. He also warmly invited him to visit Papua New Guinea. During the meeting with the Hon’ble Chief Minister of Tamil Nadu, C. Joseph Vijay, he elucidated about the rich natural resources of Papua New Guinea and discussed potential areas of collaboration between Tamil Nadu and Papua New Guinea.


This meeting is expected to open new opportunities and strengthen trade relations between Tamil Nadu and Papua New Guinea.

Sunday, 10 May 2026

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா

*ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!*











ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.


விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.


வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில்…


கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது..,

புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.


இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது..,

நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.


ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது…

“ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.


இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…,

பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


நடிகர் கவின் பேசியதாவது…,

பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.


இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…,

பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.


தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…,

விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.


தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…,

தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


நடிகை கௌசல்யா பேசியதாவது..,

இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.


நடிகை மீனா பேசியதாவது,

“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.


நடிகர் அருள்ஜோதி பேசியதாவது,

“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.


Trailer Link 🔗

https://youtu.be/3j0NBortZ3k?si=M16Q53p10TWuu4dH

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா

 *சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.*




சென்னைஸ் அமிர்தா

கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும்  ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார். 


இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.


சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம் பெறுவது மிகவும் பாராட்டத்தக்கது என்றும், மாணவர்களின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறினார்.


மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, புன்னகை நிறைந்த பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர்,  மாணவர்கள் உருவாக்கிய கலைப்பணிகள் மற்றும் சிற்பங்களை ஆர்வமாக பார்வையிட்டு, அவர்களின் திறமைகளை பாராட்டினார்.


இந்த நிகழ்விற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட, 5 நாடுகளின் உணவுகளையும் ஸ்ரீலீலா சுவைத்து மகிழ்ந்தார். பல்வேறு சுவைகள் குறித்து தனது விருப்பங்களை பகிர்ந்து கொண்டு, உலக நாடுகளின் உணவுகளை அறிந்து ரசிப்பதில் உள்ள தனது ஆர்வத்தையும் ஶ்ரீலீலா மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் அன்னையர் தின கொண்டாட்டமும் இணைத்து நடத்தப்பட்டது. அப்போது தனது தாயார் குறித்து உணர்ச்சிப் பெருக்குடன் ஸ்ரீலீலா உரையாற்றினார்.  . தனது வாழ்க்கை மற்றும் தொழில் வளர்ச்சியில் தனது அன்னையின் பங்கு குறித்து நினைவுகூர்ந்த அவர், மாணவர்களுடனான உரையாடலை மேலும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மாற்றினார்.


மாணவர்கள் அவரது உடற்பயிற்சி நடைமுறை, உணவுப் பழக்கம், திரைப்பட பயணம் மற்றும் தனிப்பட்ட விருப்பங்கள் குறித்து பல கேள்விகள் கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் அவர் எளிமையாகவும் மகிழ்ச்சியுடனும் பதிலளித்து, மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் அளித்தார்.


இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்ததுடன், அவர்களின் கனவுகளை அடைய தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது.


கல்வி, திறன் மேம்பாடு, புதுமை மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளில் சென்னைஸ் அமிர்தா தொடர்ந்து முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. செய்முறை கல்வி மற்றும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


சென்னைஸ் அமிர்தா கல்விக் குழுமம், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளில் 31,650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் பெருமையுடன் தெரிவித்துள்ளது.


இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, இந்தியாவின் முன்னணி விமானப் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கல்லூரியை பார்வையிட்டபோது, சுமார் 170 மாணவர்கள் சர்வதேச இன்டர்ன்ஷிப் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை

 “‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”





*முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்*


இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.


‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது. இந்தக் கதை, கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரின் அமைதியான அவமானங்களும் பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன. இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.


இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது:

“கோட்டை கருப்புசாமி என்பது பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் சிரமமானவர், நெகிழ்வானவர், மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அந்த நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது. தமிழ் ZEE5 இந்தக் கதைக்கு அதன் இயல்பான, நேர்மையான வடிவத்தில் வெளிப்பட இடமளித்தது. பார்வையாளர்கள் கோட்டை கருப்புசாமியின் பயணத்தை வெறும் பார்ப்பதற்காக அல்ல, அதை உணரவும், சிந்திக்கவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.”


மே 22 முதல் தமிழ் ZEE5-ல் ‘வாரண்ட்’ தொடரைப் பார்க்க தயாராக இருங்கள்.


ZEE5 பற்றி:


ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழிக் கதை சொல்லியாகும். இது ZEE என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இது 4,071+ திரைப்படங்கள், 1,800+ தொலைக்காட்சி தொடர்கள், 422+ வலை ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான தொகுப்பை வழங்குகிறது.


இந்த உள்ளடக்கம் 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைபர்-லோகல் சந்தா திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஓடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி. இதில் ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் நேரலை டிவி ஆகியவை அடங்கும்.


உலகளாவிய தொழில்நுட்ப கூட்டாண்மைகளின் மூலம் உருவான வலுவான டீப்-டெக் அமைப்பு, பல சாதனங்கள், எகோசிஸ்டம்கள் மற்றும் இயங்குதளங்களில் ZEE5-ஐ சீரான அனுபவத்துடன் வழங்க உதவுகிறது. Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.


https://www.youtube.com/watch?v=z58t_iTcAz0