Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Sunday 16 September 2018

Actor Gopi Gandhi's Vairamagan to release for Deepavali

Actor Gopi Gandhi's Vairamagan to release for Deepavali

கோல்டு ஸ்டார்” கோபி காந்தி நடித்துள்ள “வைரமகன்” திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து தீபாவளிக்கு வெளியாகிறது. “கோல்டு ஸ்டார்” கோபி காந்தி தனது ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, நடித்துள்ள “வைரமகன்” சில 

நாட்களுக்கு முன்புதான் தணிக்கை குழுவினரால் பார்க்கப்பட்டு எந்த வித காட்சியும் நீக்காமல் “u” சான்றிதழ் வழங்கி 

பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், 
நடிகருமான “கோல்டு ஸ்டார்” கோபி காந்தி கூறியதாவது. இன்றைய காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் சினிமா பெரிதும் 
பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி ரசிகர்களை திரையரங்கிற்குள் கொண்டு வர வைப்பது மிக மிக கடினமான விஷயமாகும். 

இன்றைய சூழலில் இணையதளங்கள் மூலமாக படங்களை பார்க்கும் மோகம் அதிகரித்துள்ளதால் திரையரங்கிற்கு வரும் கூட்டம் 
குறைந்துள்ளது. அதை மீறி நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் அதிக பொருட்செலவில் தயாராகும் படங்களை திரையரங்கிற்கு வந்து 
ரசிகர்கள் காண்கிறார்கள். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் படத் தலைப்பை பதிவு செய்ய எவ்வளவு அலைச்சல் 
பட வேண்டியுள்ளது. பின்னர் ஒவ்வொரு சான்றுகள் பெறுவதற்கும், படம் வெளியிடுவதற்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 

எவ்வளவு அலைக்கழிக்கப்பட வேண்டியுள்ளது. அச்சங்கங்களில் பொறுப்பு வகிப்பவர்கள் படத்தை பண முதலீடு செய்து எண்ணற்ற 
கஷ்டங்களையும், அவமானங்களையும் கடந்து கலை மோகத்தினால் படம் தயாரிக்கிறார்கள் என்பதை முதலில் திரைப்பட சங்கங்களில் பொறுப்பு 
வகிப்பவர்கள் உணர்ந்து செயல்பட   வேண்டும். சிறிய தயாரிப்பாளர்களாகட்டும், பெரிய தயாரிப்பாளர்களாகட்டும் அவரவரின் 
சக்திக்கு தகுந்த அளவிற்கு முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள், ஒரு படம் ஆரம்பிக்க பணத்தை முதலீடு செய்ய 

பல்வேறு வகையில் பாடுபடுகிறார்கள். ஏனென்றால் மற்ற தொழில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தொழில் சினிமா அது 
ஒரு காட்சி பொருள் தான் மூலதனம் அதனால் ஒரு படத்தை முடித்து வெளிக் கொண்டு வர பணத்துக்காக தயாரிப்பாளர்கள் படும்பாடு 
கொஞ்ச, நஞ்சமில்லை. இதனை கலைஞர்கள் படுத்தும்பாடு மிக மிக சிரமமானது. இதில் இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் 

மற்றும் தொழிலாளர்கள் அனைவருமே பணத்தை மட்டுமே நேசித்து செயல்படுகிறார்கள். இதையெல்லாம் படப்பிடிப்பு 

நடக்கும் போது பல்வேறு சிரமங்களை கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்து பெருமூச்சு விடும் நேரத்தில் அடுத்து 
தொழில் நுட்ப கலைஞர்களிடையே சிக்கிக் கொண்டும் படும் அவஸ்தை ஒரு பக்கம் அதைப் போராடி முடித்து அடுத்து தணிக்கை சான்று 
பெறுவதற்காக விலங்குகள் கலச் சான்று பெறுவதற்கு ஒரு ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 




மேலும் திரைப்பட ஒளிபரப்பு நிறுவனங்களிடையே எத்தனை அலைச்சல்கள் இப்படி ஒரு திரைப்படம் உருவாக ஒரு தயாரிப்பாளர் படும் 
கஷ்டம், கொஞ்ச நஞ்சமில்லை. இதற்கு பிறகு திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு செல்ல திரையரங்குகள் தற்போது சிறிய 
திரைப்படங்களுக்கு திரையரங்கங்களே இல்லாத நிலை உருவாகியுள்ளது. எப்படி சாதாரண ஒரு கலை மோகம் கொண்ட தயாரிப்பாளர் 

படம் தயாரித்து வெளியீடு செய்ய முடியும் என்பதே தெரியவில்லை? இதையெல்லாம் கடந்துதான் “வைரமகன்” திரைப்படம் முழுமையடைந்து 
வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் என்னுடைய மக்கள் சேவை இயக்கம் மூலமாக படம் வெளியாகும் 
நாளில் டி.வி.டியும் வெளியிட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றே முழுத் திரைப்படமும் இணையதளங்களில் 

வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. “வைரமகன்” திரைப்படத்தை திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் நம்பி இந்த புதிய 
முயற்சியில் இறங்கியுள்ளேன். நான் தெய்வமாக வணங்குகின்ற திரைப்பட ரசிகர்கள் என்னை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை 
இருக்கிறது. “வைரமகன்” படத்தை முருகவேல் இயக்கியுள்ளார். எஸ்.எஸ். சூர்யா இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சகன்யாஸ்ரீ 







நடித்துள்ளார். நெல்லை சிவா, போண்டா மணி, விஜய் கணேஷ், அப்பு உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர், “வைரமகன்” 
படத்தில் நான்கு பாடல்கள் அருமையாக இடம் பெற்றுள்ளன. அம்மா மகனின் பாசத்தை சொல்ல முயற்சி 






செய்துள்ளோம். “வைரமகன்” திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய மக்கள் சேவை இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் ரசிகர்களையும் வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு திரைப்படத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான “கோல்டு ஸ்டார்” கோபி காந்தி தெரிவித்துள்ளார்.
 செய்தி வெளியீடு

No comments:

Post a Comment