Featured post

The Federation of Tamil Sangams in North America (FeTNA) is a non-profit organization of

 The Federation of Tamil Sangams in North America (FeTNA) is a non-profit organization of Tamil organizations in the United States and Canad...

Thursday, 20 September 2018

2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும்

2D நிறுவனத்தில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் 'உறியடி' இயக்குனர் !!!!

 





 



 



 












 





 


வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24, மகளிர்மட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வரை சமூக நோக்கிலான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை 'உறியடி' பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். உறியடி படம் மூலம் திரையுலகையும் ரசிகர்களையும் கவனிக்க வைத்த இவர், தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்திருப்பது படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியனுடன், தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் சார்பில் மற்றுமொரு இணை தயாரிப்பாளராகவும் இணைகிறார் விஜய்குமார் 

உறியடி படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் நாயகனாக விஜய்குமார் நடிக்கிறார். நாயகியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார்.. 'மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் 'உறியடி'யில் கவனம் ஈர்த்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

விஜய்சேதுபதி-த்ரிஷா நடித்துவரும் '96' படத்திற்கு இசையமைத்துள்ள கோவிந்த் மேனன் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் (அறிமுகம்) இந்தப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக புரமோஷன் பெற்றுள்ளார். படத்தொகுப்பு - லினு (அறிமுகம்), கலை - ஏழுமலை ஆதிகேசவன், சண்டை பயிற்சி ; விக்கி

சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜூடன் அதேசமயம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.

No comments:

Post a Comment