Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Tuesday, 18 September 2018

MPME படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

"மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்...







சமீபத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்திய விழாவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக தேர்வு செய்யப்பட்ட  "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" அண்ணா விருதை  தட்டிச்சென்றது. பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய இப்படம் கமர்ஷியல் வெற்றியையும் ருசி பார்த்தது.

கூடுதல் சிறப்பாக தற்போது தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் திரையிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு எளிதாக இங்கு படங்களை தேர்வு செய்து திரையிடுவதில்லை. தரமான படங்களை மட்டுமே குறிக்கிறார்கள்.

இமைக்கா நொடிகள்.. கோலமாவு கோகிலா, மேற்குத்தொடர்ச்சி மலை ஆகிய படங்கள் சமீபத்தில் திரையிடப்பட்டவை.

இயக்குநர் ராகேஷ் தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் என்றாலும் அவரது முந்தைய படங்கள் திரையிடத் தேர்வாகவில்லையாம்.

தற்போது "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" படம் பயிலும் மாணவர்களின் நலன் கருதி திரையிடப்படுவதும் கலந்துரையாடல் நடைபெறுவதும் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டார் இயக்குநர் ராகேஷ்.

வரும் வியாழனன்று (20/9/18)   "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" படம் திரையிடப்பட இருக்கிறது. படக்குழுவினர்கள் கலந்துகொள்கின்றனர்.

No comments:

Post a Comment