Featured post

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

 பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு  லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட ...

Friday 21 September 2018

Udhayanidhi Stalin & Anandhi starring Kayal on track

*உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், 'கயல்' ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”!*

“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”.  “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார்.

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் : ரமேஷ் (விஸ்வரூபம் 2) கலை இயக்குநர்: சிவா, நடன இயக்குநர்: தினேஷ்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணித்த பின்னும் மறக்காது ஏஞ்சல்” என்பதை உணர்த்தும் “ரொமாண்டிக் ஹாரர்” ஜானரில் இப்படம் உருவாகிறது. மேலும், இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment