Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Wednesday, 26 September 2018

Manisha starrer Sanda Muni a horror comedy is on roll

நட்ராஜ்- யோகிபாபு - மனிஷா யாதவ் நடிக்கும்
                                                  " சண்டி முனி "  
                              மில்கா எஸ். செல்வகுமார் இயக்குகிறார்

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட  நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு "சண்டிமுனி " என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் கதா நாயகனாக நட்ராஜ் நடிக்கிறார்...
கதாநாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். வில்லனாக சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார்

 


 



 


 












 



 



 



 



 



 










மற்றும் மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர்,அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.



ஒளிப்பதிவு           -        செந்தில் ராஜகோபால் 
இசை           -        ரிஷால் சாய்
எடிட்டிங்     -        புவன்
கலை           -        முத்துவேல்.
பாடல்கள்   -        வா.கருப்பன்
நடனம்        -        பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக்
ஸ்டண்ட்     -        சூப்பர் சுப்பராயன்
தயாரிப்பு மேற்பார்வை   -   குமார்
தயாரிப்பு   -  சிவம் மீடியா ஒர்க்ஸ்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா.எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் முனி காஞ்சனா 2படத்தில் உதவியாளராக பணியாற்றினார். இவர் இயக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 27 ம் தேதி பழனியில் துவங்குகிறது. தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெற்று முடிவடைய உள்ளது.

படம் பற்றி இயக்குனர் மில்கா எஸ் செல்வகுமார் கூறியதாவது...
இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ்  சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார்.

மனிஷா யாதவ் ராதிகா என்கிற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகுகிறது.

ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும் இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம். படத்தின் 

சுவாரஸ்யமாகவும் திகிலாகவும் இருக்கும் நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி..ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும் என்கிறார் மில்கா எஸ் செல்வகுமார்.

No comments:

Post a Comment