*கலைஞானியும், கலைப்புலியும் பாராட்டிய குறும்பட கதாநாயகன்!*
திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் ஒரு குறும்படம் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. " பதநிச கம்யூனிகேஷன்ஸ்" தயாரிப்பில் ராம்போ நவாகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த குறும்படத்தின் பெயர் "எ ஸ்ட்ரோக் ஆஃப் டிசொணென்ஸ்".
ஒரு இசைக்கலைஞனின் கதையாக, 25 நிமிடம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தில் ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்துள்ளார். தன் நடிப்பால் இசைக்கலைஞனை அப்படியே கண்முன் நிறுத்தும் அந்த ஒற்றை நடிகர், குணாநிதி.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ள இந்த குறும்படத்தைப் பார்த்து, கலைஞானி கமல்ஹாசன், தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, இயக்குநர் விக்ரமன், இயக்குநர் சீனு ராமசாமி உட்பட பல திரையுலக பிரபலங்கள் படத்தையும் படத்தில் நடித்துள்ள குணாநிதியையும் பாராட்டியுள்ளனர்.
இந்த குறும்படம் பரபரப்பாக பேசப்படுவதைத் தொடர்ந்து விரைவில் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் குணாநிதி.

No comments:
Post a Comment