Featured post

SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer

 *SJ Suryah Returns to Direction, Stars in His Dream Project “Killer”* 
*SJ Suryah Directorial-Starrer “Killer”* 
*Shooting Starts with Ritu...

Wednesday, 2 October 2019

யஷ்-ஷாம் அதிரடியாக மோதும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!


மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.


கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.


நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.. ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.. ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ்.

No comments:

Post a Comment