Featured post

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது

 *கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !! டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்க...

Saturday, 23 November 2019

கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை

 

தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . இவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் , புது முயற்சிகளையும் செய்து வருவது வழக்கம் . தளபதி விஜயின் மீதான ரசிகர்களின் அளவில்லா அன்பின் வெளிபாடாக இன்று கன்னியாகுமரியில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை அமைத்து சிலையை திறந்து வைத்துள்ளனர் .

உலக சுற்றுலா தளங்களில் முக்கிய பகுதி கன்னியாகுமரி . அந்த மாவட்டத்தில் ரயில்  நிலையம் அருகே அமைந்துள்ள மாயாபுரி- WAX அருங்காட்சியகத்தில்  தளபதி விஜய்க்கு இன்று  மெழுகு சிலை 
விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் முன்னிலையில் திறந்து 
பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் அமிதாப் பச்சன் , அன்னை தெரசா , ஒபாமா போன்ற முக்கியமான  ஜாம்பவான்களான 20 சிலைகள் மட்டுமே உள்ளன . அதில் தளபதி விஜய் அவர்களின் மெழுகு சிலையும் இணைத்துள்ளது . தமிழ் நடிகர்களில் தளபதி விஜய்க்கு மட்டுமே இந்த அருங்காட்சியகத்தில்  சிலை உள்ளது . தளபதி விஜயின் மெழுகு சிலையுடன் சுற்றுலா பயணிகளும் , ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வருகின்றனர் .

No comments:

Post a Comment