Featured post

Aari Arjunan starrer 4th Floor Set for February Release

 *Aari Arjunan starrer 4th Floor Set for February Release"* Aari Arjunan's 4th Floor, right from its time of announcement has been ...

Friday, 29 November 2019

ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்த மைண்ட் வாய்ஸ் பகுதி 2


ஆர்.ஜே.பாலாஜி - JioSaavn இணைந்து வழங்கும் மைண்ட் வாய்ஸ் பாட்காஸ்ட் புதிய பகுதியில், நேயர்களுக்குத் தரப்படும் தவறான தகவல்கள் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியன குறித்து பல சுவையான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. பிரதி புதன் கிழமை தோறும் JioSaavnல் இடம் பெறும் இந்தப் புதுமையான பாட்காஸ்ட் நிகழ்ச்சி புதிய கோணத்தில் கருத்துக்களை பதிவு செய்கிறது.
 மக்கள் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் வைத்தே, எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்பதை சர்வதேச விவரணப்படம் ஒன்றின் மூலம் விளக்குகிறார் பாலாஜி. உதாரணமாக கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற ஒருவர், ஒரு நாள் முழுவதும் அமெரிக்காவில்  ஒளிபரப்பாகும் செய்தி சேனல்களைப் பார்த்துக்கொண்டிருந்தால்  அவரது சிந்தனையின் போக்கு எவ்வாறு மாற்றமடையும் என்பதை இதில் விளக்குகிறார்.

இந்த பத்து நிமிட ஒலிபரப்பில் மேலும் அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, சிரபுஞ்சி பயணத்தில் இருந்தததையும், ஊடகத்துறையில் தீவிரமாக இயங்கினாலும் வாழ்க்கை பற்றிய தனது பார்வை அப்போது எப்படி மாறிப்போனது என்பது குறித்தும் விவரிக்கிறார்.

No comments:

Post a Comment