Featured post

கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்

 கே.பாக்யராஜ் கலெக்டராக நடிக்கும் "ஆண்டவன்"! வில்லியம் பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், 'ஆண்டவன்'  திரைப்படம் உருவாகியுள...

Monday 19 October 2020

An Appeal to All Actors & Technicians who are getting

An Appeal to All  Actors & Technicians who are getting salary more than Rs.10 lacs to reduce 30% in their payment due to this pandemic impact and help the Producers to release their films.

Ref.No:TFAPA/03 அக்டோபர் 19, 2020

நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஓர் வேண்டுகோள்

என் இனிய சொந்தங்களே...  வணக்கம்...
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாக செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக சமூக இடைவெளி கடைப்பிடித்து,  பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். 
 
திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும்.அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.
 
கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். 
 
அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான வட்டிப் பெருக்கம் இதெல்லாம் தயாரிப்பாளரின் மீது விழுந்திருக்கும் மீள முடியாத பெருஞ்சுமை. அதோடு மீதி படப்பிடிப்பையும் முடித்தாக வேண்டும். 
 
தயாரிப்பாளர்களுக்கு50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. தயாரிப்பாளர்களின்இந்தகடினமானசூழ்நிலையைஉணர்ந்து, ஏற்கனவேசிலநடிகர்கள்அவர்கள்ஒப்பந்தம்செய்துகொண்டசம்பளங்களிலிருந்து30சதவீதம்குறைத்துகொள்வதாகவாக்குறுதிதந்திருக்கிறார்கள். அவர்களைபாராட்டும்இந்ததருணத்தில்,இந்தஇக்கட்டானசூழ்நிலையில்தயாரிப்பாளர்களுக்கு தோள் கொடுக்க வேண்டியது அனைத்துநடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கடமையல்லவா?


தெலுங்குமற்றும்மலையாளத்திரைப்படத்துறையில்அனைத்துநடிகர்களும், தொழில்நுட்பகலைஞர்களும்தாமேமுன்வந்துதங்களின்சம்பளங்களில்30முதல்50சதவீதத்தைவிட்டுகொடுத்துள்ளதைநீங்கள்அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம்முன்னோடியானதமிழ்சினிமாவிலும்இதுநடக்கவேண்டாமா?
 
எல்லோரையும் கேட்கவில்லை. ரூபாய்பத்து இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறைந்த பட்சம் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 30சதவீதத்தை(30%)விட்டுக் கொடுத்து, நிறுத்தி வைத்திருக்கும் படங்களைமுடித்துதருமாறு உங்களில் ஒருவனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் வேண்டுகோள் வைக்கிறேன். 
 
 இனி ஒப்பந்தம் செய்யும் படங்களுக்கு இந்த வேண்டுகோள் பொருந்தாது. அது நீங்கள் உங்கள் சம்பளங்களை பேசி ஒத்து வந்தால் வேலை செய்யப் போகிறீர்கள். ஆனால், முடிவடைய வேண்டிய படங்களுக்கு உங்கள் பங்களிப்பைக் கொடுத்து 30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக் கொள்கிறேன். 
 
தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்நீங்கள்அனைவரும்எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். 
மீண்டெழ கைகள் கோர்ப்போம். சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் வாழவைப்போம். 
பாசத்துடன்,


பாரதிராஜா
தலைவர்
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

 

No comments:

Post a Comment