நயன்தாரா அம்மனாக அசத்தும் “மூக்குத்தி அம்மன்” பட டிரெய்லரை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட், ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) !
டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) ! மிக சமீபத்தில், தமிழ் ரசிகர்களை மனதில் கொண்டு அவர்களுக்கென்றே, தமிழ் நாட்டின் புதிய திரை... உங்கள் சொந்த திரை எனும் பெயரில் புதியதாக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதில் வெளியாகவுள்ள ஐந்து புதிய தலைப்புகளை சமீபத்தில் அறிவித்தது. இது தமிழ் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாவதாக “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் நேரிடையாக தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.
“மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ஒரு ஆன்மீக டிராமா திரைப்படம். இப்படத்தில் அம்மனாக நயன்தாரா முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, RJ பாலாஜி ஏஞ்சல்ஸ் ராமசாமி எனும் பாத்திரத்தில் நடிக்கிறார். குடும்ப பாரங்களையும் தன் பணியையும் கடிவாளாம் பூட்டப்பட்டது போல் பார்த்து வரும், ஏஞ்சல்ஸ் ராமசாமி வாழ்விற்குள் மூக்குத்தி அம்மன் நிஜமாக வர, அடுத்து நடக்கும் களேபரங்களே, கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் டிரெய்லர் லிங்க் : https://youtu.be/-5MvjjJfMkE
தெலுங்கு டிரெய்லர் லிங்க் : https://youtu.be/hzyuaiEnbl0
இப்படத்தின் டிரெய்லர் ஞாயிறன்று நடைபெற்ற CSK vs RCB இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது வெளியிடப்பட்டது. டிரெய்லர் குறித்து RJ பாலாஜி கூறுகையில், “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் பண்டிகை நாளில் நாம் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து கொண்டாடும் வகையிலான படமாகும். தீபாவளியை விட ஒரு சிறந்த நாள் இப்படத்தை வெளியிட கிடைக்காது, அதிலும் இணைய உலகை கலக்கும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வெளியாவது எங்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பண்டிகை நாளில் பெரும் மகிழ்ச்சியை உங்கள் அனைவர் மனதிலும் இப்படம் உண்டாக்கும் என உறுதி கூறுகிறேன்.
இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தெலுங்கு பதிப்பான அம்மொரு தல்லி (Ammoru Thalli) டிரெய்லரை டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு வெளியிட்டார்.
RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரித்துள்ளார். நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் RJ பாலாஜி முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான ஊர்வசி, மௌலி,அஜய் கோஷ், ஸ்ம்ருதி வெங்கட், மது, அபிநயா, மனோபாலா, மயில்சாமி ஆகியோரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள்
No comments:
Post a Comment