Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Friday 30 October 2020

Positive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் "தயாரிப்பு எண் 2"

 Positive Print Studios LLP நிறுவனம் தாயாரிக்கும் "தயாரிப்பு எண் 2",  கௌதம் கார்த்திக் நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகிறது !



தங்கள் தயாரிப்பில்  ஒரு இயக்குநரின் படம் வெளியாகும் முன்னரே, அவரை புதிய படத்திற்கும்  ஒரு தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்வது, தமிழ் சினிமாவில்  அரிதாக நிகழும் சம்பவம். Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவரும், இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் இறுதி வடிவத்தை பார்த்து, வியந்து, அவரை தங்களது அடுத்த,  புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். இந்த புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 







Positive Print Studios LLP நிறுவன தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார்  இது குறித்து கூறியதாவது...


 எங்கள் மனதை கவர்ந்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் உடன்  மேலும் ஒரு புதிய படத்தில் இணைவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அவருடைய இயக்கத்தில்  நாங்கள் தயாரித்த முதல் படம், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவான  "பிளான் பண்ணி பண்ணனும்" எங்களுக்கு மிகப்பெரும் திருப்தியை தந்துள்ளது. "பிளான் பண்ணி பண்ணனும்" படத்தின் இறுதி வடிவம்  ஒரு தயாரிப்பாளாரக எங்கள் எதிர்பார்ப்பை பலமடங்கு பூர்த்தி செய்து, பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உலகளாவிய வகையில் அனைத்து ரசிகர்களையும் இப்படம் கண்டிப்பாக கவரும். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் தன்மை கொண்ட, மற்றுமொரு அட்டகாசமான திரைக்கதையுடன் அவர் எங்களை அனுகியபோது,  உடனடியாக அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிய ஒப்புக்கொண்டோம். எந்தவகையான கதாப்பாத்திரத்திலும் கலக்கும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்திருப்பது மெலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்படம் இதுவரை அவர் திரைவாழ்வில் செய்திராத,  முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அவதாரத்தில் அவரை காட்டும் படமாக இருக்கும். 



இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது....


முதலில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெரும் ஆதரவாக இருந்து, புதிய படத்தை துவக்கவும் காரணமாக இருக்கும் தயாரிப்பாளர்கள் L சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.  இருவரும் எனது புதிய  திரைக்கதையால் கவரப்பட்டார்கள். இந்த கடினமான சூழல் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கடும் பிரச்சனைகளை தந்து வருகிறது என்பதால் படத்தின் பட்ஜெட்டை மாற்றியமைக்கும் எண்ணத்தில் இருந்தேன், ஆனால் இருவருமே அதை மறுத்து, திரைக்கதை கேட்பதை அப்படியே எடுப்போம். இறுதி வடிவமே முக்கியம் என்றார்கள். சினிமா மீதான அவர்களின் காதலும், என் மீதும் திரைக்கதை மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் எனக்கு பெரும் மகிழ்வை தந்தது. அவர்களுக்கு நான் பெரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இளமை நாயகனாகவும் திறமை வாய்ந்த நடிகராகவும் கலக்கி வரும் கௌதம் கார்த்திக்குடன் இப்படத்தில் இணைந்த்திருப்பது பெரும் மகிழ்ச்சி. 


தற்போதைய நிலையில் "தயாரிப்பு எண் 2" என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. 2021 மார்ச் மாதம் படத்தின் பணிகளை  முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் நடிகர்கள் குழு பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக மிகவிரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment