ஜப்பான் நாட்டின் 'ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா'வில் தேர்ந்தெடுக் கப்பட்ட 'சில்லுக் கருப்பட்டி'..!
சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'சில்லுக் கருப்பட்டி' திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்று மக்களின் பாராட்டு மழையில் நனைந்து வந்த நிலையில் இப்போது ஜப்பான் நாட்டின் ஓசகா நகரில் நடைபெறும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவிலும் சில்லுக் கருப்பட்டி திரைப்படம் தேர்ந்தெடுக்ப்பட்டது. வரும் நவம்பர் 1 ஆம் தேதி அங்கு திரையிடப்படுகிறது.
சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா, நிவேதிதா சதீஷ், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்த இந்த திரைப்படம் 4 வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்திற்கு வெளியானது முதல் இன்றுவரை பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்பொழுது மற்றுமொரு கௌரவம் இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#SilluKaruppatti has
been Officially selected for screening & Nominated for the category
Best Tamil Feature film of the year 2019 at @osaka_tamil Festival Nov 1 ,
2020. Osaka City, Japan.
https://
No comments:
Post a Comment