Featured post

King Khan Shah Rukh Khan Inaugurates Kannan Ravi Group’s Panther Club in Dubai*

 King Khan Shah Rukh Khan Inaugurates Kannan Ravi Group’s Panther Club in Dubai* King Khan Shah Rukh Khan inaugurated the grand new entertai...

Friday, 30 October 2020

தி ஏடிஜி-யின் மயக்கும் இசையில் வெளியாகிறது '








 தி ஏடிஜி-யின் மயக்கும் இசையில் வெளியாகிறது 'பேரனாய்ட்': ட்ராப் சிட்டி படத்தின் லீட் சிங்கிள்- ஒமர் குட்டிங், சா-ராக்-உடன் தமிழில் ராப் பாடலை தெறிக்கவிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார் 


தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி படத்திற்கு இசையமைத்துள்ளார். சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் இசையை உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தில் லீட் சிங்கிளான 'பேரனாய்ட்' பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர் க்யூபா குட்டிங்கின் சகோதரர் ஒமர் குட்டிங், இந்தியாவிலிருந்து ஜி.வி.பிரகாஷ் குமார் என மூன்று கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

6 நிமிடங்களுக்கும் சற்று கூடுதலாக ஒலிக்கும் பேரனாய்ட், ட்ராப் சிட்டி படத்தின் முக்கியப் பாடல். ட்ராப் சிட்டி டீஸர் அண்மையில் வெளியானது. இத்திரைப்படம், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு எதிரான போலீஸ் அராஜகத்தை எடுத்துரைக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. 



பேரனாய்ட் என்ற தலைப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறும் வேளையில் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது. ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்ற கோஷங்கள் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்பாடலை வெளியிடுவது மிகவும் பொறுத்தமானதாக அமையும். துணிச்சலான முடிவும் கூட.

உணர்வுப்பூர்வமான இந்தப் பாடல் வெற்றிகளையும், இழப்புகளையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாடலுக்கு வலிமை சேர்த்துள்ளது அதன் வரிகள். முதன்முறையாக மேற்கத்திய பாடலில் தமிழில் வரிகள் அமைந்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் கண்ணே கண்ணே.. எனப் பாடலில் கசிந்துருகும் போது அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரும் குரல் வலுவாகப் பதிவு செய்யப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆங்காங்கே காவல்துறையின் அடக்குமுறை எல்லை மீறிக்கொண்டிருக்கும் தருணத்தில் இது பொருத்தமானதாக உள்ளது. அமெரிக்காவின் ப்ளாய்டுக்கு நேர்ந்தது போல் தென் தமிழகத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பாடல் உலகம் முழுவதும் இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறது.

பேரனாய்ட் உருவாக்கம் குறித்து ஏடிஜி, "நான் ஜெர்மன் இசைக்கலைஞர் ஹான்ஸ் ஜிம்மரின் இசையால் ஈர்க்கப்பட்டு இப்பாடலை உருவாக்கியுள்ளேன். இசைக்கருவிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதே அளவுக்கு குரல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் வியக்கும் 3 இசைக் கலைஞர்களும் தங்களின் பணியை மிகவும் நேர்த்தியாகச் செய்துள்ளனர்" என்றார்.

ஏடிஜியின் பேரனாய்ட் பாடல் 2020-ம் ஆண்டுக்கான மிக முக்கியமான அறிவுரையைக் கடத்துகிறது. வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கையை உரக்கச் சொல்கிறது. ஒமர் குட்டிங் பாடலின் மேற்கத்திய பின்புலத்துக்கு உயிர் சேர்த்துள்ளார். சா-ராக் பாடலின் கருத்துருவுக்கு வலு சேர்த்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் உணர்வுப்பூர்வமான வரிகளால் உருகி பாடலோடு நம்மை அரவணைக்கிறார். ரிக்கி ப்ரூச்செல்லுடன் ஜி.வி.யின் வார்த்தைகளும் மனதை பிசைய வைக்கின்றன.

"நான் இந்த உலகைப் பார்க்கிறேன்.. அது என் மீது சுமத்தப்பட்ட அடையாளத்தைக் காட்டி மிரட்டுகிறது.. எனக்கு எங்கெங்கும் அவல ஒலி கேட்கிறது.. அந்த ஒலி என்னை அச்சப்படச் செய்கிறது.. "என்ற பாடலின் வரிகள் எவ்வளவு ஆழமானவை.

உலகமே அச்சத்திலும் பதற்றத்திலும் சிக்கியிருக்கும் வேளையில் பேரனாய்ட் பாடல் ஒரு மந்திரமாக ஒலிக்கும். அந்த மந்திரம் நம்பிக்கையை விதைக்கும். புதிய நம்பிக்கை ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும்.

பாடலில் பங்காற்றியது குறித்து ஒமர் குட்டிங், "முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதை எளிதில் செய்யலாம். உங்கள் வாக்கை செலுத்தி உங்கள் குரலை ஒலிக்கச் செய்யுஙள். மாற்றத்திற்கான உங்களி பங்களிப்பை நல்குங்கள். அதன்மூலம் வெறுப்பை, அச்சத்தை நிறுத்துங்கள். இந்தப் பாடல் மூலம் நானும் என்னைப்போன்ற கலைஞர்களும் மாற்றத்தை உண்டாக்கும் பேரியிக்கமாக கைகோர்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

ராப் பாடகி சா-ராக் பேசும்போது, "திறன்வாய்ந்த பன்முகத்தன்மை கொண்ட கலைஞர்களான ஒமர் குட்டிங், ஜி.வி.பிரகாஷ், தி ஏடிஜி ஆகியோருடன் இணைந்து பேரனாய்ட் ஆல்பத்தில் பணியாற்றியது ஒரு மயக்கும் அனுபவம். சமூகத்தை அழுத்திக் கொண்டிருக்கும் ஒரு தீவிர பிரச்சினையை தனித்துவத்துடன் புத்துணர்வு பொங்கும் வகையில் எடுத்துரைக்கும் பணியில் இணைந்து செயல்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்" என நெகிழ்ந்தார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், "ஒமர் குட்டிங், சா-ராக், ரிக்கி புர்செல் மற்றும் ஏடிஜி என உலகின் ஆகச்சிறந்த கலைஞர்களுடன் இணைந்து அமைதியின், சர்வதேச ஒற்றுமையின் குரலாக ஒலிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன். இதுபோன்ற கலை வடிவங்கள் மூலம் அமைதி, அன்பு மற்றும் ஒருமைப்பாட்டை விதைப்பதில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த இயலும் என உறுதியாக நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்தப் பாடல் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு அறைகூவல். கரோனா காலத்தில் ஏற்படுட்டுள்ள அச்சத்தை நீக்கி நம்பிக்கையை விதைக்க, அமைதியை நிலைநாட்ட எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட கோரிக்கை வைக்கிறது.


@Theoneatg @theOmargooding @gvprakash 

@sarocthemc @brandontjackson @Telganesan @rickybhiphop

@kyybafilms @trapcityfilm @onlynikil

No comments:

Post a Comment