Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Monday, 19 October 2020

எழுந்து வா' - நம்பிக்கையூட்டும்

 *'எழுந்து வா' - நம்பிக்கையூட்டும் ஆண்ட்ரியா & ஏடிகே கூட்டணி*


வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ சில பாடல்களைக் கேட்போம். 
நமக்குள்ளும் சக்திகள் இருக்கிறது, அதை நமக்கே சில பாடல்கள் உணர்த்தும். அப்படியொரு பாடலாக அமைந்துள்ளது 'எழுந்து வா'. இந்தப் பாடல் குறித்து 'எழுந்து வா' பாடல் குழுவினரிடம் கேட்ட போது "சுதந்திரம் என்பது நமது மனதில் இருந்தே தொடங்குகிறது, நீங்கள் பார்க்கும் 4 சுவர்களுக்கு வெளியே அல்ல. உங்கள் ஒற்றுமை கைகொடுப்பதால் மனிதன் உருவாக்கிய எல்லைகள் மங்குகின்றன. 
 




 
 
நீங்கள் சக்தி வாய்ந்தவர். உங்களால் ஒரு போரை நிறுத்த முடியும். நீங்கள் வாகை சூடலாம். நீங்கள் பறக்கலாம். நீங்கள் காரணமாக இருக்கலாம். நீங்கள் மாற்றமாக இருக்கலாம். எனவே, எழுங்கள். ஏனெனில் உங்கள் நேரம் வந்துவிட்டது. எழுங்கள்! ஏனெனில் உங்கள் குரல் கேட்க வேண்டும். எழுங்கள்! ஏனெனில் போதும் என்பது போதாது. எழுந்து வா” என்பது தான் இந்தப் பாடல் சொல்ல வரும் கருத்து என்றார்கள்.
 
கரோனா அச்சுறுத்தலால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தச் சமயத்தில் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் ஆர்யன் தினேஷ் தங்களுடைய குரல்களின் மூலம் இருவகை கொண்ட மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் நேரத்தில், இந்த வீடியோவில் பாடல் குழுவினருடன் இணைந்து திவ்யா லீ நாயர் நடனமாடியுள்ளார். 
 
 
பாடல் குழுவினர் விவரம்: 
பாடல் இயக்கம்: நஸீஃப் முஹம்மது
பாடல் தயாரிப்பு: ப்ரித்வி சந்திரசேகர்
வீடியோ தயாரிப்பு : டி. எஸ். எம். ஜி. ஓ மற்றும் பி. டி. ஓ. எஸ் புரொடக்ஷன்ஸ்
இசையமைத்தவர்கள்: ஆண்ட்ரியா மற்றும் ஏடிகே
பாடல் வரிகள்: ஆண்ட்ரியா, ஏடிகே மற்றும் பாபி பாத்
ஆங்கில வரிகள்: ஆண்ட்ரியாராப்: ஏடிகே

No comments:

Post a Comment