தமிழ்நாட்டின் மதிப்புமிக்க எலக்ட்ரானிக்
விற்பனையாளரான விவேக்ஸ் நிறுவனத்தின்
‘அன்புடன் விவேக்ஸ்’ – மாபெரும் விற்பனை திருவிழா
சென்னையைச் சேர்ந்த விவேக் பிரைவேட் லிமிடெட்., வழங்கும் ‘அன்புடன் விவேக்ஸ்’ திருவிழா. ஒரு மாத காலம் நடக்கும் ஷாப்பிங் திருவிழாவை விவேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நம்பமுடியாத தள்ளுபடியில் மிகப்பெரிய பிராண்டுகள் மற்றும் அதிக தயாரிப்புகளை இந்த விற்பனை திருவிழாவில் கொண்டுள்ளது.
1965 ஆம் ஆண்டு, விவேக் & கோ என்ற பெயரில் நிறுவப்பட்ட விவேக்ஸ், சில்லறை விற்பனையில் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவத்தை கொடுத்து வருகிறது. மைலாப்பூரில் தொடங்கப்பட்ட முதல் கிளைக்கு பிறகு, சென்னை முழுவதும் 25க்கும் அதிகமான கிளைகளை தொடங்கியது. தமிழ்நாட்டு சந்தையில் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.
வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெற்றுள்ள விவேக்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டே செல்கிறது. இதனால், விவேக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் மிகவும் நம்பகமான சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக நீடித்து நிற்கிறது. இந்த அணுகுமுறையின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, விவேக்ஸின் புத்தாண்டு விற்பனை ஆகும். இந்த புத்தாண்டு விற்பனைக்காக வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமாகிவிட்டது. இதை 1990களிலேயே விவேக்ஸ் நிறுவனம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் விலையில், குடும்ப ஷாப்பிங் அனுபவம் தரும் நிறுவனமாக கடந்த 50 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் இதயங்களிலும் மனதிலும் விவேக்ஸ் நிறுவனம் நீடித்து நிற்கிறது. இந்த நன்மதிப்பை தொடர்ந்து பெற, புத்தம் புதிய
யுக்திகளை விவேக்ஸ் அறிமுகப்படுத்தி கொண்டே வருகிறது. அதில், மாதம் முழுவதும் கொண்டாடப்படும் ‘அன்புடன் விவேக்ஸ்’ திருவிழா விற்பனையை தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இந்த திருவிழா வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.
சமீக காலங்களில் ஏற்பட்ட ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. இந்நிலையில், இந்த திருவிழா விற்பனையின் முக்கிய நோக்கம் உள்ளூர் சில்லறை பொருளாதாரத்தை உயர்த்துவதும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டுவதிலும் முயற்சி செய்கிறது. விவேக்ஸ் திருவிழா மூலம், விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கையுடன் கூடிய வலுவான வாடிக்கையாளர் உறவை மேம்படுத்த விரும்புகிறது. ‘அன்புடன் விவேக்ஸ் திருவிழாவின் ஒரு பகுதியாக, அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை மீண்டும் வரவேற்பதற்கும், அவர்களின் ஷாப்பிங் அனுபவத்தைக் கொண்டாடுவதற்கும் விவேக்ஸ் நிறுவனம், தனது கடைகளில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், பொது மக்கள் ஷாப்பிங் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே,
ஷாப்பிங் அனுபவத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள விவேக்ஸ் நிறுவனம் இந்த திருவிழாவை முன்னெடுத்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதற் பாதியில் இருந்து, விவேக்ஸ் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக விவேக்ஸ்.காம் மற்றும் வாட்ஸ்அப் ஷாப்பிங் அம்சத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஷாப்பிங் செய்ய வாட்ஸ்அப்பில் 6369512345 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யலாம். டன்ஸோ மற்றும் லிங்க் ஆப் மூலமாகவும், 15 கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட பொருட்களை, ஆர்டர் நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.
சமீபத்தில், விவேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் பெர்லின் ஓக் ஃபர்னிச்சர்கள், நியாயமான விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது. இது குறித்து பேசிய விற்பனை மேலாளர் திரு. விஷால் பைசானி, “உள்ளூர் சந்தையில் நன்மதிப்பை பெற்ற விவேக்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்தி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு சந்தையில் விவேக்ஸ் நிறுவனம் தனி இடத்தை பெற்றுள்ளது” என்றார்.
விவேக்ஸ் நிறுவனம் பற்றி:
1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விவேக்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டின் மிகவும் நம்பகமான நீடித்த சில்லறை விற்பனையாளராக தடம் பதித்துள்ளது. தற்போது, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ள விவேக்ஸ், அதன் வெளிப்படைத்தன்மை, ஷாப்பிங் அனுபவம் மற்றும் நியாயமான விலைகளுக்கு பெயர் பெற்ற கடையாக உள்ளது. மேலும், 'புத்தாண்டு விற்பனை' என்ற புதிய யுக்தியை அறிமுகப்படுத்திய பெருமையும் இந்த நிறுவனத்தையே சேரும். இந்த புத்தாண்டு விற்பனைக்காக வாடிக்கையாளர்களும், விற்பனையாளர்களும் எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில், விவேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் பெர்லின் ஓக் ஃபர்னிச்சர்கள், நியாயமான விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது.
முக்கிய
குறிப்புகள்:
3 தலைமுறைகள் | 55 ஆண்டுகள் | 24 கிளைகள் | 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கடைகள் | பெர்லின் ஓக் ஃபர்னிச்சர்களுக்கான 3 பிரத்யேக ஷோரூம்கள், முகப்பேர், போரூர், வடபழனி
விருதுகள் மற்றும் நன்மதிப்புகள்:
3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சந்தையில் மிகவும் நம்பகமான சில்லறை கடை, MCKinsey, 2000 | இந்தியாவின் முதல் 10 சில்லறை விற்பனையாளர்களில் #3 வது இடத்தைப் பிடித்தது விவேக்ஸ், பிசினஸ் டுடே, 2001 |
விவேக்ஸ் -விற்பனை செய்யும் பிராண்டுகளை விட நம்பகமானது, CII & MCKINSEY, 2002 | இந்த ஆண்டின் வாடிக்கையாளர் விரும்பும் விற்பனையாளர், படங்கள் இதழ், 2004 | ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சிறந்த 500 சில்லறை விற்பனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றது, ரீட்டெயில் ஆசியா, 2009 | சிறந்த ஸ்டோர் டிசைன், வி.எம்.ஆர்.டி விருதுகள், 2013 | எல்ஜி லீக் ஆஃப் டைட்டன்ஸ், 2019 | லாயிட் லெஜண்ட்ஸ், 2020 | பாராட்டு விருது, தமிழ்நாடு ஆர்யா விஸ்யா மகிளா சபை, 2020
No comments:
Post a Comment