Featured post

Meiyazhagan has no action-packed sequences,

 *“Meiyazhagan has no action-packed sequences, but is an out-and-out commercial film” - Actor Karthi* *“Director Prem is never smug-bitten b...

Friday 30 October 2020

பிரம்மாண்ட திறப்புவிழா கண்ட ஜி (ZI )

 பிரம்மாண்ட திறப்புவிழா கண்ட ஜி (ZI ) கிளினிக்கின் 3-வது கிளை: நடிகர் சந்தானம் திறந்துவைத்தார் (FINAL)


மறைந்த மருத்துவர் சேதுராமனின் ஜி (ZI ) கிளினிக்கின் ஈசிஆர் கிளையை அவரது நெருங்கிய நண்பரும் நடிகருமான சந்தானம் திறந்துவைத்தார்.
ஜி (ZI ) சரும, கேச மற்றும் லேசர் சிகிச்சை மருத்துவமனை முதன்முதலாக 2016-ல் செயல்படத் தொடங்கியது. ஏற்கெனவே போயஸ் கார்டன், அண்ணா நகரில் கிளைகள் உள்ளன. இந்நிலையில், இன்று அதன் மூன்றாவது கிளை ஈசிஆரில் தொடங்கப்பட்டது.
 





































































































 
 
புதிய கிளையை நடிகரும், மருத்துவர் சேதுராமனின் நண்பருமான சந்தானம் திறந்துவைத்தார். திறப்புவிழாவில், நடிகர்கள் வெங்கட் பிரபு, பாபி சிம்மா, பூர்ணிமா பாக்யராஜ், சதீஷ், ஆரவ், தர்ஷன், சன்சிதா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். 
 
ஜி (ZI ) கிளினிக்கின் சிஇஓ மற்றும் மருத்துவர் சேதுராமனின் மனைவிக்கு அனைவரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நாளை (அக்டோபர் 30) முதல் மருத்துவமனை செயல்படத் தொடங்குகிறது.
 
நிகழ்ச்சியில் பேசிய உமா சேதுராமன், "ஈசிஆரி-ல் ஜி (ZI )  கிளினிக்கின் கிளையைத் திறக்க வேண்டும் என்பது எனது கணவர் மருத்துவர் சேதுராமனின் கனவுத் திட்டம். அவருடைய பிறந்தநாளான இந்த நன்நாளில் அதை நனவாக்கியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி. 
 
நோயாளிகளை அணுகுவதிலும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் மருத்துவர் சேதுராமன் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையையும் கனிவையும் சற்றும் குறையாமல் அளிக்கும்வகையில் இந்த புதிய கிளையும் செயல்படும்" என  நெகிழ்ச்சி பொங்க நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment