Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 7 January 2021

மாறா படத்திலிருந்து ஓ அழகே

 *மாறா படத்திலிருந்து ஓ அழகே பாடலோடு மாதவனோட பயணம் மேற்கொள்ளுங்கள்: தாமரையின் துள்ளலான வரிகளுக்கு, பென்னி தயாலின் மயக்கும் குரலில் ஜிப்ரானின் இசையில்,*


திலீப் குமார் இயக்கியிருக்கும் மாறா திரைப்படத்தை ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பாக ப்ரதீக் சக்ரவர்த்தியும், ஷ்ருதி நல்லப்பாவும் தயாரித்துள்ளனர். மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தியா உள்ளிட்ட 240 நாடுகளில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், மாறா திரைப்படத்தை, தமிழில், ஜனவரி 8 2021 முதல் அமேசான் ப்ரைமில் பிரத்யேகமாகக் கண்டு களிக்கலாம். 

ஒரு அறை உனது பாடலுடன் ரசிகர்களை மயங்கவைத்த பிறகு, வெளியீடுக்குத் தயாராக இருக்கும் மாறா திரைப்படத்திலிருந்து இன்னொரு மெல்லிய பாடலின் காணொலி முன்னோட்டத்தை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. 





ஓ அழகே என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு இசை ஜிப்ரான், வரிகள் எழுதியது தாமரை, பென்னி தயால் பாடியிருக்கிறார். இந்தப் பாடல், மாதவன் தனது பைக்கில் மலைப் பகுதிகளைச் சுற்றிப் போகும் பயணத்தைக் காட்டுகிறது. பயணம் மேற்கொள்ளும் எவருக்கும், இந்த மென்மையான பாடல் உற்ற துணையாக இருக்கும். 

இந்தப் பாடலைப் பற்றிப் பேசியிருக்கும் ஜிப்ரான், "ஓ அழகே பாடல், நாடோடி மாறாவின் மலைகளை நோக்கிய பயணத்தைக் காட்டுகிறது. இந்த கதாபாத்திரம் மேற்கொள்ளும் அழகிய பயணத்தை மெருகேற்றும் விதமாக ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். 

மாறா ஒரு இசை சார்ந்த படமாக இருக்கும் என்று முதலில் சொன்ன போது நான் அந்த கருவால் ஈர்க்கப்பட்டேன். ஒரு கதையை இசையை அடிப்படையாக வைத்துச் சொல்வது இருப்பதிலேயே பெரிய சவால். அதே நேரம் உற்சாகம் தருவதும் கூட. 

காதல், நம்பிக்கை, கலை எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த இந்த இசைக் காவியத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி " என்று கூறியுள்ளார். 

இந்த மென்மையான பாடலை படமாக்கியது பற்றிப் பேசிய இயக்குநர் திலீப் குமார், "இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓ அழகே, ஏனென்றால் எல்லா வயதினருக்கும் இந்தப் பாடல் பிடிக்கும். இந்தப் பாடலின் அழகுக்கு அழகு சேர்த்திருப்பது பென்னி தயாலின் குரல். 

அழகிய, கலைநயமிக்க காட்சிகளுடன் இந்தப் பாடல் அழகாகக் கலக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. மேலும் படத்தின் கருவைச் சொல்லி, உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தங்கள் முழு அர்ப்பணிப்பைக் கொடுத்து இந்தப் பாடலை உருவாக்கிய ஜிப்ரான் மற்றும் தாமரை இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது" என்று பகிர்ந்துள்ளார். 

திலீப் குமார் இயக்கத்தில், ப்ரமோத் ஃபிலிம்ஸ் சார்பாக ப்ரதீக் சக்ரவர்த்தியும், ஷ்ருதி நல்லப்பாவும் தயாரித்திருக்கும் மாறா திரைப்படத்தில் அலெக்சாண்டர் பாபு, ஷிவதா நாயர், மௌலி, பத்மாவதி ராவ், அபிராமி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கதை சுருக்கம்

சிறுவயதில் அந்நியர் ஒருவரிடம் தான் கேட்ட தேவதைக் கதை, கடலோரக் கிராமங்களில் சுவர் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளதை பாரு பார்க்கும்போது, அதை வரைந்த மனிதனைத் தேடிச் செல்கிறாள் - மாறா


பாடல் : https://youtu.be/MuuXb96S18Q

No comments:

Post a Comment