Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Monday, 25 January 2021

திருமலா அறிமுகப்படுத்தும் ‘ஒயிட்

 திருமலா அறிமுகப்படுத்தும் ‘ஒயிட் கோல்ட் 100% திடமான & க்ரீம் எருமை பால் மற்றும் தயிர்


சென்னை, ஜனவரி 24, 2021: முன்னணி பால் நிறுவனமான திருமலா, புத்தம் புதிய திருமலா ஒயிட் கோல்ட் – தூய எருமை பால் மற்றும் தயிர் வகையை அறிமுகம் செய்துள்ளது. திருமலா ஒயிட் கோல்ட் பால் வகை, 100% திடமாகவும், க்ரீமியாகவும், இயற்கை புரதச்சத்து, வைட்டமின்ஸ் மற்றும் தாதுக்கள் நிறைந்ததாகவும் உள்ளது. 





திருமலா ஒயிட் கோல்ட் எருமை பால் 500 மிலி 35 ரூபாய்க்கும், ஒயிட் கோல்ட் எருமை தயிர் 190 கிராம் 15 ரூபாய்க்கும், 500 கிராம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. திருமலா ஒயிட் கோல்ட் பால் வகையில் 6% FAT மற்றும் 9% SNF அளவும், தயிர் வகையில் 5% FAT & 10% SNF அளவும் உள்ளது.

திடமான, க்ரீம் வகையான எருமை பால் மற்றும் தயிர் வகைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான சரியான தேர்வாக அமையும் திருமாலாவின் ஒயிட் கோல்ட் எருமை பால் மற்றும் தயிர். தரமான மற்றும் தூய்மையான உணவு பொருட்களை விற்பனை செய்வதில் பெயர்போன திருமலா பிராண்டு, இப்போது மற்றுமொரு தரமான பால், தயிர் வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


திருமலா பற்றி:

தென் இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றான திருமலா, 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தன்னுடைய நிறுவனத்தை விரிவுப்படுத்தியது. தற்போது, தென் இந்திய மாநிலங்களில் தயாரிப்பு ஆலைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.



No comments:

Post a Comment