Featured post

தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

 'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில்  பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'த...

Friday 12 February 2021

“ஏலே” திரைப்படம் 2021 பிப்ரவரி 28

“ஏலே” திரைப்படம் 2021 பிப்ரவரி 28 அன்று நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது

சென்னை பிப்ரவரி 11, 2021 : மனித உணர்வுகளை, அதன் அழகியல்களை, உயர்தரத்தில் காட்சிப்படுத்தும் திறமைமிகு இயக்குநர், அனைவரது மனங்களை வென்ற ஹலிதா சமீம் அவர்களின் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் நடிப்பில் “ஏலே” திரைப்படத்தை தயாரித்ததில் YNOT Studios, Reliance Entertainment மற்றும் Wallwatcher Films பெருமை கொள்கிறது. பெரும் உற்சாகத்துடன் 2021 பிப்ரவரி 12 அன்று உலகம் முழுதும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். 

“ஏலே” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில், சில ஆச்சர்யகரமான புது விதிகளாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களாலும் படத்தை திரையரங்கிற்கு கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகையால் திரையரங்குகளை தவிர்த்து எங்கள் படத்தினை உலகம் முழுதும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து 2021 பிப்ரவரி 28 அன்று ஞாயிறு பகல் 3 மணிக்கு, உலக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, நேரடியாக இத்திரைப்படத்தினை   வெளியிடுகிறோம். 

திறமையாளர்களுக்கான வாய்ப்புகளையும், ரசிகர்களுகான தரமான கதைகளையும் திரையரங்கு உட்பட அனைத்து தளங்களிலும் வழங்குவதில் எங்கள் நிறுவனம் எப்போதும் முனைப்புடன் செயல்படும்.

YNOT Studios தயாரிப்பாளர் சசிகாந்த் கூறியதாவது... 

YNOT Studios, புதியவகை கதைகள் கொண்ட திரைப்படங்களை, துணிவுடன் தயாரிக்கும் நிறுவனம் எனும் பெயரை பெற்றிருக்கிறது. இந்த துணிவு படங்களின் கதைகளங்களில் வித்தியாசம் காட்டுவதோடு மட்டுமல்லாமல், தயாரிப்பு தரப்பில் அனைத்து வகை திட்டமிடுதலிலும் புதுமையை கடைப்படிப்பதில் முன்னணி வகிக்கிறது. “ஏலே” திரைப்படம் மனித உணர்வுகளை, வாழ்வியிலின் அழகியலோடு நகைச்சுவையோடு எதார்த்தத்தோடு கூறும் திரைப்படம். இயக்குநர் ஹலிதா சமீம் மிக அழகாக இப்படைப்பினை உருவாக்கியுள்ளார். குடும்பங்கள் இணைந்து கொண்டாடுவதற்கு மிகச்சரியான படைப்பு இது. அத்தகைய பார்வையாளர்களை அதிகம் கொண்டிருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இப்படம் சிறப்பு திரையிடலாக,  வெளியிடப்படுவது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. 

இயக்குனர் ஹலிதா சமீம் கூறியதாவது...

என்னுடைய ”ஏலே” திரைப்படம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே “ஏலே” என் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும் வெளீயீடாக பெரும் எண்ணிக்கையிலான  ரசிகர்களை  

ஒரே நாளில் என் படம் சென்றடைவதை, காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதிய தளத்தை மிகப்பெரும் எண்ணிக்கையிலான ரசிகர் கூட்டத்திடம் உலகம் முழுதும் இத்திரைப்படத்தை வெளியிடும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள். 

Reliance Entertainment Group CEO ஷிபாசிஷ் சர்கார் கூறியதாவது...

“ஏலே”  படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் ஆகும். மனதை வருடும் இந்த அழகான படைப்பினை பார்வையாளர்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். தொலைக்காட்சியின் பலத்தையும் அதன் பிரமாண்டத்தையும் நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியுடன் இந்த மிகப்பெரும் திரைப்பட  வெளியீட்டில் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி. 

Wallwatcher Films சார்பில் புஷ்கர் & காயத்திரி கூறியதாவது... 

ஒரு நல்ல சினிமா, அதன் பார்வையாளர்களை ஏதாவது ஒரு வகையில் கண்டிப்பாக சென்றடையும் என்பதில் எங்களுக்கு  மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படம் எங்களது  Walwatcher Films சார்பில் உருவாகும் முதல் படைப்பு மேலும் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. மனதிற்கு இதமான இத்திரைப்படம் அனைத்து  ரசிகர்களையும் எளிதில் கவரும். ஸ்டார் விஜய் உடைய  நேரடியான தொலைக்காட்சி சிறப்பு திரையிடல், இந்த அழகான திரைப்படத்தை உங்கள் இல்லங்களுக்கே எடுத்துவரவுள்ளது. துணிவு மிகுந்த இந்த புதிய நடைமுறை படைப்பாளிகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் பல புதிய கதவுகளை திறக்கும். 


"இயக்குநர்  ஹலிதா சமீம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தினை, Reliance Entertainment நிறுவனத்துடன் இணைந்து S. சசிகாந்த் Y Not Studios சார்பில் தயாரித்துள்ளார். சக்ரவர்த்தி ராமசந்திரா இணைத்தயாரிப்பும்   படைப்பாளிகள்  புஷ்கர் & காயத்திரி (விக்ரம் வேதா புகழ்)  Wallwatcher Films சார்பில் கிரியேட்டிவ் புரடியூசர்ஸ் ஆகவும் பணிபுரிந்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் இசை - கேபெர் வாசுகி, அருள் தேவ். ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். கலை இயக்கம் - வினோத் ராஜ்குமார். படத்தொகுப்பு - ரேமண்ட் டெரிக் கிரஸ்டா, ஹலிதா சமீம். சண்டைப்பயிற்சி - தினேஷ் சுப்பராயன்.  VFX சூப்பரவைஸர் - லின்கின் லிவி. ஒலிப்பதிவு - S. அழகியகூத்தன். ஒலி வடிவமைப்பு - G. சுரேன். விளம்பர வடிவமைப்பு - கபிலன். 


YNOT Studios குறித்து 

www.ynotstudios.in 

YNOT Studios நிறுவனம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 2009 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை துவங்கிய தயாரிப்பாளர் S. சசிகாந்த் அவர்கள் 2019 வரை தமிழ், இந்தி, தெலிங்கு மலையாளம் மொழிகளில் மொத்தமாக 13 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி இயக்கிய விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் 3 மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான “கேம் ஓவர்” தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக ஜகமே தந்திரம், மண்டேலா, ஏலே திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. 

நிறுவனர் : S. சசிகாந்த். 

 /YNotStudios     @studiosynot           /studiosynot



Reliance Entertainment குறித்து

www.relianceentertainment.net

Reliance Entertainment நிறுவனம் திரு அனில் D. அம்பானி அவர்களால் வழிநடத்தப்படும், இந்தியாவின் மிகப்பெரும் வணிக குழுமமான Reliance குழுமத்தை சேர்ந்த முன்னணி மீடியா திரைத்துறை, பொழுதுபோக்கு துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 250 மில்லியன் சந்தாதார்களை கொண்டது. இந்தியர்களில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவரை சந்தாதாரராக கொண்டுள்ளது இந்நிறுவனம் 8 மில்லியன் பங்குதாரர்களுடன் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. Reliance Entertainment மீடியா  மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த  Reliance Group குழுமம் ஆகும். திரைத்துறை, தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் கேமிங் தளங்களுக்கு படைப்புகளை உருவாக்கி விநியோகம் செய்யும் முன்னணி நிறுவனம் ஆகும்

தலைமை அலுவலர் : ஷிபாசிஷ் சர்கார் 

 /RelianceEntertainment        @RelianceEnt             /reliance.entertainment


Wallwatcher Films

wallwatcher Films இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி அவர்களால் நிறுவப்பட்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். கதை சொல்லிகள், கதைகளை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டு திரைத்துறை மற்றும் டிஜிட்டலுக்கான படைப்புகளை உருவாக்குவதில் கவனம் கொண்டு இயங்கும் நிறுவனம் இதுவாகும். 

நிறுவனர்கள் : புஷ்கர் & காயத்திரி 

 /wallwatcherfilm @wallwatcherfilm           /wallwatcherfilms


இயக்குநர் குறித்து 

ஹலிதா சமீம் : பூவரசம் பீப்பி படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி பாராட்டுக்கள் குவித்த முக்கியமான வளர்ந்து வரும் இளம் படைப்பாளி ஆவார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன் நடிப்பில் இவரது சமீபத்திய திரைப்படமான “சில்லுகருப்பட்டி” திரைப்படம் பெரும் பாராட்டுக்களை குவித்துள்ளது.

@halithashameem

No comments:

Post a Comment