Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Wednesday, 24 February 2021

V.C.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம்

 V.C.வடிவுடையான் இயக்கும் பாம்பாட்டம்  இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் மல்லிகா ஷெராவத்

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்  கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “ பாம்பாட்டம் “

நான் அவன் இல்லை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நடிக்கிறார்கள். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இளவரசி நாகமதி காதபாத்திரத்தில் மல்லிகா ஷராவத் நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் ஆசிஷ்வித்யார்த்தி, முக்கிய கதாாத்திரத்தில் நடித்துள்ளார்.

இன்னும் ஏரளாமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.




 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள  முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.

இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.


ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ்


இசை – அம்ரிஷ்


பாடல்கள்  - பா.விஜய், யுகபாரதி, விவேகா


எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்


கலை  - A.பழனிவேல்


ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன்


நடனம் – தினேஷ், சிவசங்கர்


மக்கள் தொடர்பு – மணவை புவன்


இணை தயாரிப்பு  - பண்ணை A இளங்கோவன்


தயாரிப்பு  - V.பழனிவேல்


கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான்

No comments:

Post a Comment