Featured post

மாஸ்க் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *மாஸ்க் திரைப்பட இசை மற்றும்  டிரெய்லர் வெளியீட்டு விழா !!* The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெ...

Monday, 22 February 2021

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2

Official Press Release from Rajkumar Theatres Rajkumar Sethupathy

வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.






‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச் 5 படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது. தெலுங்கு பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீ பிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.


இதற்கிடையே, ‘திரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்


. தமிழ் பதிப்பின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.


‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல் ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment