Featured post

நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி

 *நடிகர் அருண் விஜய்-யின் “ரெட்ட தல” திரைப்படம் 2025 டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!* BTG Universal நிறுவனத்த...

Monday, 15 February 2021

சின்ன மச்சான்...’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன

‘சின்ன மச்சான்...’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்

‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே.









 


உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார்.


அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார்.


மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து பேசிய ஸ்ரீதர், “பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.

No comments:

Post a Comment