Featured post

JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event

 JioStar Leadership Team Meets Hon’ble Chief Minister Thiru. M.K. Stalin Ahead of ‘JioHotstar South Unbound’ Event   Chennai, 5 December 202...

Sunday, 7 February 2021

பழகிய நாட்கள் -தமிழ் திரைப்படம்- ஒரு காதலர் தின அன்பளிப்பு!

 பழகிய நாட்கள் 


-தமிழ் திரைப்படம்- ஒரு காதலர் தின அன்பளிப்பு! 

எழுதி இயக்கியுள்ளவர் -ராம்தேவ்

காதலை மய்யமாக வைத்து தமிழில் இதுநாள் வரை பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன !









ஆனால் இப்படம் காதலின் குணாதிசயங்களையும் காதல் வயப்படும் ஜோடிகளின் மனப்போக்கையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் நோக்குகிறது !


காதலிப்பது என்பது இரு வகைப்படும்

ஒன்று -இளவயது காதல் 

இரண்டாம் வகை -முதிர்ந்த காதல்!

இந்த இரு வகை காதல் பற்றியும் இயக்குனர் ராம்தேவ் யதார்த்தமாகவும் இயல்பாகவும், ஒரு காதல் ஜோடியை  மையமாக திரைக்கதையில் அமர்த்தி, சுவைபட, துளி கூட விரசமின்றி ஒரு காதலர் தின பரிசாக இக்காதல் கதையை வழங்கியுள்ளார் என்றால் அது மிகையில்லை!

மீரான் மற்றும் மேகனா-புதுமுக அறிமுகங்கள் இப்படத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்துள்ளனர்! 

மற்றும் இயக்குனர் ஸ்ரீநாத், சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, Monkey ரவி , வின்சென்ட் ராய், சிவகுமார், சுஜாதா ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். 

செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாடியுள்ளதோடு நடனமும் ஆடியுள்ளார்!

திரைப்படத்தின் முற்பகுதி காதல் காட்சிகளை மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிற்பகுதி காதல் காட்சிகளை பிலிப் விஜயகுமார் தனது காமெராவினால் பதிவு செய்த்துள்ளார்.

இயக்குனரும் கபிலனும் பாடல்களை எழுதியுள்ளனர்.

ஜான் A . அலெக்சிஸ் , ஷேக் மீரா மற்றும் மனிதன்-  ஆகிய மூவரும் இசைஅமைந்துள்ளனர்.

தனது படைப்பு பற்றி இயக்குனர் நம்மிடையே பேசுகையில் -

காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் இப்படம் இளம் வயதினரை நிச்சயம் திரையரங்குகளுக்கு சுண்டி இழுக்கும்! அதுவும் கல்லூரிகள் திறக்கப்படுகிற இந்த சூழ்நிலையில் அதுவும் 100  %  இருக்கைகளில் அமருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் இளம் வயதினர் நிச்சயம் இப்படம் பார்க்க வருவார்கள்!

படத்தின் போஸ்டர் களில் நாயகனும் நாயகியும் ஒரே உடையில் தோன்றியுள்ளது Social Media களில் பெரியதொரு பரபரப்பை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

தற்சமயம் காதல் வயப்பட்டிருப்பவர்களும் காதல் வயப்பட போகிறவர்களும் நிச்சயமாக இப்படத்தை பார்த்து ரசிப்பார்கள் என்பது உறுதி!

இப்படம், February 12th 2021 திரை அரங்களில் வெளியாகிறது .


இந்த காதல் கதை,  ஒரு காதலர் தின அன்பளிப்பு !

No comments:

Post a Comment