Featured post

Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara;

 Introducing Shruti Haasan from the world of Dulquer Salmaan’s Aakasamlo Oka Tara; Presented By Geetha Arts & Swapna Cinema, Produced By...

Monday, 15 February 2021

திரைக்கு ரெடியான “தள்ளிப்போதே” திரைப்படம்

 திரைக்கு ரெடியான  “தள்ளிப்போதே” திரைப்படம் ! 

இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நடிகர் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கும் காதல் திரைப்படம் “தள்ளிப்போகாதே” அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு திரைக்கு தயாராகியுள்ளது. 





தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் எனும் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் வெற்றிப்படத்துடன், அறிமுகமான இயக்குநர் R.கண்ணன் அவர்கள் அதனை  தொடர்ந்து, வந்தான் வென்றான், சேட்டை, கண்டேன் காதலை என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் எனும் பெயர் பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் அவர் இயக்கிய ‘இவண் தந்திரன்’ எனும் ஆக்சன் கமர்ஷியல் படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. இதனை தொடந்து அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு,  தற்போது தனது தனித்தன்மை மிகுந்த ரொமான்ஸ் வகை படத்திற்கு திரும்பியுள்ளார். முழுக்க முழுக்க காதல், நகைசைவை, உணர்வுகள்  நிரம்பிய அழகான குடும்ப படத்தினை இயக்கியுள்ளார். அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அமிதாஷ் ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன், உள்ளிட்ட  பல பிரபலங்கள் முக்கிய  பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். 

இப்படத்தின் டப்பிங் பணிகள் முதல், அனைத்து கட்ட பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது படத்தின் விளம்பர முன்னோட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. படத்தின் திரை வெளியீடு குறித்த அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபிலன் வைரமுத்து  பாடல்கள் மற்றும் வசனத்தை  எழுதியுள்ளார்.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment