Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 11 March 2021

அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன்

 அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படம் ! 


இந்திய திரையுலகில் மிகவும் மதிப்புமிகு, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, தமிழ், இந்தி,தெலுங்கு, பெங்காலி என பல மாநில மொழிகளிலும் எண்ணற்ற வெற்றிபடங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம் தான் Pramod Films. திரைப்படங்களின் மீது தீராத காதலுடனும், அர்ப்பணிப்புடனும்  பல விதமான ஜானர்களில் பல மொழிகளிலும் வெற்றிப்படங்களை தந்து, தனித்தன்மை கொண்ட நிறுவனமாக விளங்கி வருகிறது Pramod Films. இதுவரை பல மொழிகளில் 24 படங்களை Ziddi, Love in Tokyo, Tumse Achha Kanu hai, Naya Zamana, Jugnu (மிகபெரும் வெற்றிப்படம்), Warrant, Dream Girl, Azaad, Patita, Jyoti, Nastik, Jagir, Teen Murthi, Shatru, Birodh, Deedar, Barood, From Sydney with love, Tuzhya Vin Marjawaan, Jomer Raja Dilo Bor, Deva, Lakshmi, Sweater  மற்றும்  Maara போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. 












இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமான Pramod Films தனது 25 வது படைப்பாக நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு  2021 மார்ச் 8 ஆம் தேதி படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் துவங்கியது. 


தயாரிப்பாளர் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது..


எங்களது 25 வது படைப்பாக ஒரு தமிழ் படத்தை தயாரிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படங்கள் மீது தீவிரமான காதலுடன், தனித்தன்மை மிக்க நேர்த்தியான கதைகளை  ரசிர்கள் கொண்டாடும் வண்ணம் தருவதில் கவனமுடன் இயங்கிவருகிறது எங்கள் நிறுவனம். நேர்த்தியான படைப்புகளை கொண்டாடுவதில், தமிழ் ரசிகர்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தில் உருவான “மாறா” படமே அதற்கு சாட்சி. இப்படத்திற்கு ரசிகர்கள் தந்த பேராதரவு தான் மேலும் தமிழில் படங்கள் செய்ய பெரும் ஊக்கமாக அமைந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசியுடன் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் எங்கள் நிறுவனத்தின் 25 வது படைப்பை துவங்கியுள்ளோம். அதர்வா முரளி,  இயக்குநர் சாம் ஆண்டன் வெவ்வேறு வகையான ஜானர்களில் படங்களை முயற்சித்து பார்ப்பவர்கள். முன்னதாக அவர்கள்  கூட்டணியில் உருவான 100 படம் பெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஆக்சன் கமர்ஷியல் திரைப்படமாக அனைவரும் ரசிக்கும் படைப்பாக இப்படம் இருக்கும்.

No comments:

Post a Comment