Featured post

Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups

 Nayanthara’s first look as Ganga unveiled from Yash’s Toxic: A Fairytale for Grown-Ups* As Yash's Toxic: A Fairytale for Grown-Ups inch...

Thursday, 11 March 2021

மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா

 *மார்ச் 12-ல் வெளியாகும் சாரா தேவா - கெவின் நடிப்பில் உருவாகியுள்ள  ‘பூம் பூம் காளை’..!*


*தேனிலவு செல்லும் புதுமண தம்பதிகளின் ஈகோ யுத்தமே ‘பூம் பூம் காளை’..!*

 

*‘காதல் பொய்.. காமம் நிஜம்’ ; அதிரவைக்கும் ‘பூம் பூம் காளை’..!*

 

ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.

 





காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்கிறார்  இயக்குனர் R.D.குஷால் குமார்.. ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்..

 

நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள்.. நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபடவே விரும்புகிறாள்.. நாயகனோ திருமணம் முடிந்தபின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே.. அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.


இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா  இல்லையா என்பதை  நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். கதாநாயகியாக  சாரா தேவா நடித்துள்ளார். இவர் ‘சிவலிங்கா’ படத்தின் நாயகிகளில் ஒருவராக  நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உட்பட பலர் நடிக்கின்றனர்..  


மார்ச் 12 - ல் திரைக்கு வரும் இந்த படத்தை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ்' உலகமெங்கும் வெளியிடுகிறது.

 

தொழில்நுட்ப கலைஞர்கள்

 

ஒளிப்பதிவு: K.P.வேல்முருகன்

 

படத்தொகுப்பு: யுவராஜ்

 

இசை: P.R.ஸ்ரீநாத்

 

பாடல்கள்: S.ஞானகரவேல்

No comments:

Post a Comment