Featured post

Draupathi 2 Movie Review

 Draupathi 2 Tamil Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம draupathi 2 படத்தோட review அ பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது  mohan g...

Friday, 12 March 2021

எதிர்பார்க்கும் வாக்குறுதி!

 எதிர்பார்க்கும் வாக்குறுதி!



1. மருத்துவக் கொள்ளையை 

     தடுப்போம்.

2. கல்விக் கொள்ளையை 

     ஒழிப்போம்!

3.தனியார் பள்ளிகள் உட்பட 

     அனைத்து பள்ளிகளிலும்

     தமிழ் கட்டாயப் பாடமாக 

      .ஆக்கப்படும்

4.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு

     மக்கள் பிரச்சினையை பேச 

      சட்டசபைக்கு சென்றபின் சும்மா

     சும்மா வெளிநடப்பு செய்யாமல்

     பிரச்சனைகளை 

       எதிர்கொள்வோம்!

5. MLA என்பது சேவைக்கான பதவி

    எனவே அதற்கு சம்பளம் வாங்க 

    மாட்டோம்.

6. அனைத்து ஜாதி மக்களையும்

     சமமாக நடத்துவோம்!

7. எந்தவொரு மதத்தையும்

     இழிவாக பேச மாட்டோம்!

8. மக்கள் வரிப்பணத்தை இலவசம் 

     என்ற பெயரில் , எங்கள் கட்சியை

      வளர்க்க பயன்படுத்த மாட்டோம்!

9. தற்பொழுது இருக்கும் எந்த 

     திட்டத்தின் பெயரையும் மாற்ற 

      மாட்டோம். 

10. அரசு திட்டங்களுக்கு எந்த 

       தலைவரின் பெயரையும் 

       சூட்டாமல் ,அரசு என்ற பெயரை 

        மட்டுமே சூட்டுவோம்.

11. கூட்டணியில்

       வெற்றியடைந்துவிட்டு பின் 

        கட்சிமாறமாட்டோம்.

         ஆதரவை வாபஸ் வாங்க 

           மாட்டோம்!

12. கட்டப் பஞ்சாயத்து செய்வோரை

       குண்டர் சட்டத்தில் கைது 

        செய்வோம்!

13. நிலமோசடி செய்வோரின் 

       சொத்துக்களை பறிமுதல் 

        செய்வொம்!

14. தன் கட்சி தலைவர்களின் 

       சமாதிகளை கட்சிப்

        பணத்தில் 

       பராமரிப்போம். அதற்கு மக்கள் 

        வரிப்பணத்தை வீணாக்க 

         மாட்டோம்.

15. டாஸ்மாக்கை மூடுவோம்.

      இல்லையென்றால் பாதியாக

      குறைப்போம்.

         * அனைத்து கட்சிகளும்

            இந்த வாக்குறுதி 

             குடுப்பார்களா???

                                    * பேரரசு*

No comments:

Post a Comment