Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Thursday, 4 March 2021

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில

 தமிழ் தேசிய புலிகள் கட்சியின் மாநில மாநாடு 9 ஆம் தேதி நடைபெறுகிறது - மன்சூரலிகான் அறிக்கை

தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் மார்ச் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. 

இது குறித்து கட்சியின் நிறுவனர் தலைவர் மன்சூரலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அன்புடையீர் வணக்கம்,



தமிழ் தேசிய புலிகள் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் மார்ச் 9 ஆம் தேதி, சென்னை, 100 அடி சாலையில் உள்ள தியாகி 

அஞ்சலையம்மாள் மண்டபத்தில் நடைபெற உள்ளது.


மாநாட்டின் போது, நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள், இஸ்லாமிய தொண்டு தன்னார்வ அமைப்புகள், இயக்கத்தில் இணைய 

உள்ளனர். அனைத்து மாவட்டங்களுக்கும், செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். அந்நேரம் தமிழ் தேசிய புலிகளின் கொள்கைகள் 

வெளியிடப்படும்.


தமிழர் வேலை வாய்ப்பை மீட்பது, தமிழர் நிலங்களை கார்ப்பரேட் தனியார் முதலாளிகளிடமிருந்து மீட்பது, தமிழர் மண்ணை நோக்கி 

வரும் பேராபத்தில் இருந்து மீட்க, ஒத்தக்கருத்துள்ள அனைத்து இயக்கங்களும் தமிழ் தேசிய புலிகள் கட்சியில் இணைய இருக்கின்றன.


வரும் தேர்தலில் எந்தந்த தொகுதியில் போட்டியிடுவது, யாருடன் கூட்டணி என்றும் முடிவு செய்யப்படும்.


No comments:

Post a Comment