Featured post

Maanbumigu Parai Movie Review

Maanbumigu Parai Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம manmubigu parai படத்தோட review அ தான் பாக்க போறோம். Leo Siva Kumar, Gayathri rema ...

Thursday, 4 March 2021

வேலம்மாள் நெக்சஸ் குழுமம் ரெய்ன் டிராப்ஸ் அறக்கட்டளையுடன்

 வேலம்மாள் நெக்சஸ் குழுமம் ரெய்ன் டிராப்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கும் 'மகளிர் சாதனையாளர் விருதுகள்' நிகழ்வு- 2021, மார்ச் 6 ஆம் தேதி மாலை 6:30 மணி முதல் சென்னை ராணி சீதை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் தங்களது  தனித்துவமான சாதனைகள் மற்றும் பங்களிப்புகளிப்புகளை வெளிப்படுத்தி வரும் பல்வேறு சிறந்த பெண் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவிக்கும்  இந்த விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

தென்னிந்தியாவில் தரமான கல்வியை அரங்கேற்றும் முதன்மை நிறுவனமாக செயல்பட்டு வரும் நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் நெக்ஸஸ்
குழுமத்தின் இந்த   விருது  வழங்கும் விழா விளையாட்டு, இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம், வணிகம், சமூக நலன், கல்வி போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்த வல்லமைமிக்க குறியீட்டு அடையாளமாக விளங்கும் பெண்களைத் தேர்ந்தெடுத்து  கவுரவிக்கும் ஒரு முயற்சியாகும்.
இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் பின்வருமாறு
 திருமதி பாப்பம்மாள் - பத்மஸ்ரீ விருது பெற்றவர்..

 


 


கோயம்புத்தூரைச் சேர்ந்த 103 வயதான கரிம விவசாயி, திருமதி லட்சுமி கிருஷ்ணன் - 93 வயது ஐ.என்.ஏ சுதந்திரப் போராளி, திருமதி ஊர்வசி - தமிழ் திரைப்படத்தாரகை மற்றும் பலர்.

சாதனை நாயகியரின் உறுதியான இந்த பயணம்  ஒரு முன்மாதிரி
வெற்றிப்படிக்கட்டாக அமைந்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும். 


இந்தச் சாதனை நட்சத்திரங்கள் நிறைந்த இனிய மாலைப்பொழுது பல ஆயிரம் பார்வையாளர்களை  உற்சாகப்படுத்தவும்
 பாராட்டவும் சாட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment