Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Monday, 13 May 2019

ஆர்கே சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கிக் கலக்கும் தமிழ் ,மலையாளப் படம் ' கொச்சின் ஷாதி அட் சென்னை 03'





வில்லனாக அறிமுகமாகி கதைநாயகனாக வளர்ந்திருக்கும்  ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகக் களமிறங்கி  இரு மொழிப் படமொன்றில் நடித்திருக்கிறார்.. இது தமிழ் , மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. படத்தின் பெயர் 'கொச்சின் ஷாதி அட் சென்னை 03.'. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக கலக்கியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

 அமைதிக்குப் பின்னுள்ள மர்மத்தைப் பேசுகிற இப்படத்தை, மலையாள இயக்குநர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார்.

 படத்தின் கதை கேரளாவில் உள்ள கொச்சினிலிருந்து சென்னைக்குப் பயணிக்கிறது .
இப்படத்தின் கதையில் வரும் பாத்திரங்கள் 70%  தமிழும் 30% மலையாளமும் பேசுகின்றன.
ஒரு பெரிய இடத்துப் பிள்ளையின் காதல் லீலைகளின் விளைவு அடுக்கடுக்கான காதல்கள்,  அவனிடம் காதலில் விழுந்து கருவுறுகிறாள் ஒரு ஏழை மகள் ஷாதி என்கிற ஷாதிகா.

 தன் தாயிடம் சென்னைக்கு வேலைக்கு இண்டர்வியூவுக்குச் செல்வதாகக் கூறிக் கருவைக் கலைக்கச் செல்கிறாள். போகிற வழியிலும், சென்னை சென்ற பின்னும் அவளுக்கு என்ன நேர்கிறது? அவள் எவற்றையெல்லாம்  சந்திக்கிறாள் என்பதே மீதிக் கதை.சின்ன தடுமாற்றத்தில் விழுந்த அவளது வாழ்க்கையின் திசை மாற்றத்தைச் சொல்வதே '.கொச்சின் ஷாதி அட் சென்னை 03' படம்.

இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் ,வினோத் கிருஷன் ,சிவாஜி குருவாயூர், சினோஜ் வர்கீஸ், நேகா சக்சேனா, சார்மிளா ,அக்ஷிதா, இரத்தினவேல், ஷஷாத் அப்துல்லா திப், அபு பக்கர், நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு :ஐயப்பன் என், இசை: சன்னி விஸ்வநாத் ,கதை: ரிஜேஷ் பாஸ்கர்.
ஆர்யா ஆதி இண்டர்நேஷ்னல் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட்
தயாரித்துள்ளார்.
படப் பிடிபபு கேரளாவின் பாலக்காடு, கொச்சின், குருவாயூர், நாகர்கோயில் , மார்த்தாண்டம், கோவை, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

பொள்ளாச்சி சம்பவங்கள் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந் நேரத்தில் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுப்பது எப்படி என்பது பற்றி எச்சரிக்கிறது படம்.

பெண்களைப் பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு தரும் படியும், பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும்படியும் காதல் என்கிற வலை பெண்களைச் சுற்றிப் பின்னம்படும் விதத்தையும் கூறி அறிவுறுத்தி காட் அலர்ட் தரும்படியும் இப்படம் இருக்கும் என்று நம்புகிறார் இயக்குநர் .

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment