Featured post

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக்

 BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!  ஜெ...

Tuesday, 7 May 2019

ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர்

ஒவ்வொரு படத்திலும் தொடர்ச்சியாக வெற்றியை சுவைத்து வரும் நடிகர் ஆதியின் கதை தேர்வு பாணி அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. டிராமா, திரில்லர், ஃபேண்டஸி என அனைத்த் வகை திரைப்படங்களிலும் தனது மகத்தான நடிப்பால் நட்சத்திரமாக பிரகாசித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கும் தடகள விளையாட்டு அடிப்படையிலான படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


"நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். அவர் முதன் முதலில் ஒளிப்பதிவு செய்த ஜீவி திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் செய்த 'மண்ணின் மைந்தர்கள்' சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பிரபலம்" என்றார்.

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது என்று உறுதியளிக்கிறார் இயக்குனர் பிரித்வி. "இது 'தடகள' விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை  நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்" என்றார்.

நாயகியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.

பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிறது.

No comments:

Post a Comment