Featured post

Empuraan Movie Review

Empuraan  Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம empuran ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். prithiviraj direct பண்ண இந்த படத்தை murali...

Sunday, 5 May 2019

நெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது

 பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம்  " நெடுநல்வாடை " 

26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட   Innovatie Film Acadamy ( IFA)  சார்பில் பெங்களூரில் நடந்த    சர்வதேச திரைப்பட விழாவில் " நெடுநல்வாடை "  கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும்  பெற்றுள்ளது .

விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது..

ரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு  ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த  Innovatie Film Acadamy ( IFA)  க்கு ரொம்ப நன்றி.
எங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.
தமிழ் சினிமா துறையில்  உருவான முதல் CROWD FUNDING  திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

No comments:

Post a Comment