Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Tuesday, 8 October 2019

பிட்னஸ் ஸ்டார் மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 370

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் 'பிட்னஸ் ஸ்டார்' மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370'

கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370'.


உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ்.


நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து  'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம்  உலகின் முதல் 'வாசனை படம்' படைத்த பெருமைக்குரியவர்.


இன்று பரபரப்பாக உலகம் முழுவதும்  பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370.  இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா  குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கும். தேசிய ஒற்றுமை அதில் எதிரொலிக்கும்.


நிஜ வாழ்வில் சர்வதேச ஆணழகன் போட்டியில் வென்று பல அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ரிஷிகாந்த், இப்படத்தில்   கமாண்டோவாக நடிக்கிறார். 6 முறை மிஸ்டர் தமிழ்நாடு, 2 முறை மிஸ்டர் இந்தியா,  2 முறை மிஸ்டர் ஏஷியா, 2 முறை மிஸ்டர் வர்ல்ட் நம்பர் 6 போன்ற பிட்னஸ் போட்டிகளில் வென்றவர்.

நாற்பது நாட்கள் செய்ய வேண்டிய அதிரடி படத்திற்கான  படப்பிடிப்பை, 4 கேமராவைக் கொண்டு  நாற்பத்தியெட்டே மணி நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி சாதனை படைக்க இருக்கிறார் இயக்குனர் பாபுகணேஷ்.


ஜாக்குவார் தங்கம் மற்றும் குழுவினர் இதுவரை கண்டிராத மிகப் பிரம்மாண்ட அதிரடி காட்சிகளை இப்படத்திற்காக அமைக்க உள்ளனர்.

பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக, இயக்குனர் தானே தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு மற்ற நடிக-நடிகையர், தொழிட்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


பவர் ஸ்டார்  சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்


மீண்டும் பல இந்திய மற்றும் சர்வதேச விருதுகளான கின்னஸ், லிம்கா, ஆசியா, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை இலக்காகக் கொண்டு களம் இறங்குகிறது '370'.

No comments:

Post a Comment