Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Tuesday 15 October 2019

மலேசிய கலை விழா வெற்றி : சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நன்றி

அண்மையில் மலேசியாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பிரம்மாண்டமான கலை விழா நடைபெற்றது .வெற்றிகரமாக நடந்த அவ் விழாவையொட்டி அந்தச் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா நன்றி தெரிவித்து ஓர் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


தொலைக்காட்சிகள் மூலம் இல்லந்தோறும் சென்றடைந்திருக்கும் சின்னத்திரை கலைஞர்களின் புகழை நாடறியும் .ஆனால் அவர்களின் உரிமைகளுக்காகச் சங்கம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தது. நினைவில் வாழும் நடிகர் எஸ்.என். வசந்த் அவர்களின் முயற்சியால் 2003இல் சின்னத்திரை நடிகர் சங்கம் உருவானது. சங்கம் உருவாகிப் பல ஆண்டுகள் ஆனாலும் சங்க வளர்ச்சிக்கு என்று பெரிதாக எதுவும் திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் இருந்தது .


நான் 2019-ல்  பதவியேற்ற பிறகு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் நலனுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்தேன். அதன் விளைவாகச் சங்க நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சின்னத்திரை கலைஞர்களுக்கென்று ஒரு கலை நிகழ்ச்சி நடத்துவது என்று முடிவு செய்தோம். அதன்படி மலேசியாவில் 28. 9 .2019 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள பி.ஜி.ஆர்.எம். அரங்கில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் மிகப் பிரமாண்டமான கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

வெற்றிகரமாக நடந்த இந்த நட்சத்திரக் கலை  நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் பங்கேற்றனர். மலேசிய நாட்டு  கலைஞர்களும் தமிழ்த் திரையுலகக் கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவைப் பிரம்மாண்டமாக்கிப் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

 இந்த நேரத்தில் இந்த விழாவை ஒருங்கிணைத்து நடத்த பெரிதும் உதவியாக இருந்த மலேசியாவின் டிவைன் மீடியா நெட்வொர்க் எம் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் அவருக்குத் துணையாக இருந்த சரவணன் ,சுப்ரா , பெஞ்சமின் அவர்களுக்கும் இதற்குப் பெரிதும் துணை நின்ற டத்தோ செல்வராஜ் , ஷிவானி மாறன், டத்தோ சுகுமாரன், திருமதி ஷீலா சுகுமாரன் ஆகியோருக்கும் இந்த வாய்ப்பு உருவாக காரணமாக இருந்த இயக்குநர் தேவேந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இந்த விழாவையொட்டித் தினந்தோறும் வாழ்த்துக்கள் அனுப்பிய கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 நட்சத்திரக் கலை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்களுக்கும் திருமதி குஷ்பூ சுந்தர் இயக்குநர்கள் பி.வாசு , சந்தானபாரதி,  திருச்செல்வம் ஆகியோருக்கும்  நடிகைகள் லதா. ரோகிணி, எங்கள் சங்கத்தின் துணைத்தலைவர் மனோபாலா, செயற்குழு உறுப்பினர் சின்னிஜெயந்த் ,முல்லை , கோதண்டம், சேத்தன், தேவதர்ஷினி, ரோபோ சங்கர் , ஆர்த்தி கனேஷ் , சஞ்சீவ் ,ராஜ்கமல், சோனியா ஆகியோருக்கும்  நன்றி.

 மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கான நடனங்களை அமைத்துக்கொடுத்த நடன இயக்குநர் ஸ்ரீதர் , அசோக்ராஜ்,  மெட்டி ஒலி சாந்தி ஆகியோருக்கும் நன்றி.

அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு ஊக்கப்படுத்தி வாழ்த்துச் செய்தி அனுப்பிய  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்  நன்றி.

 நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த விஷ்ணு ஆர்ட்ஸ் ராஜேஷ் அவர்களுக்கும் திருமதி பிரியா ராஜேஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இது நாங்கள் நடத்திய முதல் நிகழ்ச்சி எனவே ஏதாவது சிறு குறைகள் இருக்கலாம் .ஒரு திருமண விழா திட்டமிட்டு நடத்தப்படும் போது கூட அதில் சிலருக்கு மன குறை ஒன்று வரும். இவ்விழா முதன் முதலாக எங்களால் நடத்தப் பட்டுள்ளது.

 இந்த  நிகழ்ச்சியில் சிறு குறைகள் இருந்தன  என்று சில ஊடகங்களில் எழுதியிருந்தார்கள். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.

 எதையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்து உற்சாகத்தைக் கொடுத்து பங்களிப்பு செய்த சின்னத்திரை கலைஞர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்விழா நடப்பது சங்க வளர்ச்சிக்காகத்தான்  என்பதைப் புரிந்துகொண்டு சின்னஞ்சிறு குறைகளைப் பொருட்படுத்தாமல் எங்களுக்கு அனைவரும்  ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் நிகழ்ச்சி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது .

நான் 1992-ல் சன் டிவியில் செய்தி பிரிவிற்குச் சென்று அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் உயர்ந்து பணியாற்றினேன். அப்படிப்பட்ட என் தலைமையில் ,2019 நான் தலைமை ஏற்ற பிறகு நடக்கிற நடந்த இந்தக் கலைவிழாவை சன் டிவியில் ஒளிபரப்பு அனுமதி வழங்கிய மதிப்பிற்குரிய கலாநிதி மாறன் அவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு சின்னத்திரை நடிகர் சங்க தலைவர்  ரவிவர்மா கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment