Featured post

Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading

 Next big leap by Producer Bazaar: Producer Bazaar to co-host India Joy 2025, India’s leading entertainment technology industry event, in pa...

Tuesday, 2 March 2021

ஆர்யா-சயீஷா நடிப்பில் “டெடி” படத்தின்

 ஆர்யா-சயீஷா நடிப்பில் “டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது!



தமிழ் சினிமாவில்  சிறந்த மற்றும் புதுமையான திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியுள்ள  திரைப்படம் “டெடி” . டிஸ்னி + ஹாட்ஸ்டார் மல்டிப்ளெக்ஸ் தளத்தில் ப்ரத்யேகமாக  வெளியாகும் தமிழ் மொழி திரைப்படமாகும்.


“டெடி” டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது. 


‘டெடி’ படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், “டெடி” படத்திலிருந்து முதல் தனிப்பாடலாக ‘என் இனிய தனிமையே’ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்  ஆர்யா நடித்திருக்கும் இந்த பாடல் உங்கள் தனிமையை போக்கும் விருந்தாக இருக்கும். தனிமையின் எதார்த்தத்தை கூறும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் அவர்களின்  வியக்க வைக்கும்  இசையில், சித் ஸ்ரீராம்  தனது அழகான குரலில் இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலின் மயக்கும் வரிகளை  மதன் கார்க்கி எழுதியுள்ளார்.


'டெடி' படத்தில் நிஜத்தில் காதல் தம்பதிகளாக உலா வரும்  ஆர்யா மற்றும் சயீஷா நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.  அவர்களுடைய காதலின் எழில்மிகு தருணங்கள் அட்டகாசமான வகையில்  திரையிலும்  உயிர்பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் மிக சிறந்த  இயக்குநர்களில் ஒருவரான சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில்  K.E.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்படும் “டெடி”  படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியில் பிரத்தியேகமாக மார்ச் 12, 2021 அன்று வெளியிடப்படுகிறது.


பாடலைப் பற்றி இசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது...

" என் இனிய தனிமையே”  பாடல் மாடர்ன் உலகின்  பாடல்.  இளைஞர்களின் இதயதுடிப்பை பிரதிபலிக்கும் அழகான பாடல். மதன் கார்க்கி எழுதிய அழகான பாடல் வரிகளை,  சித் ஸ்ரீராம் அற்புதமாக பாடியுள்ளார். இளைஞர்கள் விரும்பும் நட்சத்திர  நடிகர் ஆர்யா நடித்திருப்பதால், “டெடி” பார்வையாளர்களால் விரும்பப்படுவது உறுதி என்றார். 



பாடல் குறித்து நடிகர் ஆர்யா கூறியதாவது..., 

" என் இனிய தனிமையே” ஒரு அருமையான பாடல், குறிப்பாக தனிமையை நேசிக்கும், தன்னை நேசிக்கும், தற்காலத்திய சிங்கிள் உலகத்தினருக்கான பாடல். இசையமைப்பாளர் டி. இமான், “டெடி”  படத்திற்கு வெகு சிறப்பான  இசையை வழங்கியுள்ளார். இப்பாடல் ரசிகர்களை மயக்கும் அதே  நேரத்தில் உத்வேகம் தரும்  ஆற்றலும் கொண்டுள்ளது. என்னைப் போலவே ரசிகர்களும் பாடலையும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன். " என்றார்.



பாடல் இணைப்பு:


கதை சுருக்கம்:

ஸ்ரீ வித்யா ஒரு இளம் மாணவி, கல்லூரி சுற்றுல்லா பயணத்தின் போது துரதிர்ஷ்டவசமான விபத்தை சந்தித்து ஒரு மருத்துவமனையில் தனியாக இருக்கிறார். இந்த மருத்துவமனையின் பணிபுரியும் சில  கெட்ட குணம் கொண்ட மருத்துவர்கள், உதவியற்று, தனியாக இருக்கும் அவரை, மருத்துவ பலன்களுக்கு பயன்படுத்திக் கொள்ள,  மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட கோமாவில் வைக்கின்றனர். கரடி பொம்மையாக வாழும் பேச்சுதிறன் கொண்ட  “டெடி”  ஸ்ரீ வித்யாவின் அவல நிலையை அறிந்ததும், அவரது உயிரைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறது. ஆனால் அது தனியாக இதைச் செய்ய முடியாது என்பதை அறியும். ஒரு நாள், சிவா என்ற பலசாலி இளைஞன், ஒரு பெண்ணைக் காப்பாற்றுவதை “டெடி” காண்கிறது. மேலும் ஶ்ரீ வித்யா   விசயத்தில் அவனது உதவியை நாட முடிவு செய்கிறது. டெடி சிவாவிடம் முழு கதையையும் சொல்கிறது, இருவரும் ஸ்ரீ வித்யாவைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்கின்றனர். பின்னர் நடக்கும் சாகசங்களே படம். 


ஆர்யா-சயீஷா நடிப்பில் ஃபேண்டஸி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள 'டெடி' படத்தின்  உலகளாவிய பிரீமியரை அனைவரும் கண்டுகளியுங்கள். இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வி.ஐ.பி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாதாரர்களுக்காக   பிரத்தியேகமாக 12 மார்ச் 2021 அன்று வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment