Featured post

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic announced at Cannes Film Festival 2025; Directed by Om R...

Sunday, 14 March 2021

எளிய மக்களின் பசியை போக்க நாடு முழுவதும் சைக்கிளில்

 எளிய மக்களின் பசியை போக்க  நாடு முழுவதும்  சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணிப்பூர் இளைஞர் ரோஹன் பிலேம் சிங் ! 


ரோஹன் பிலேம் சிங் பல்வேறு மனிதாபிமான மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு 2018  ஆம் ஆண்டிலிருந்து சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இளைஞர் .

தற்போது பசியால் வாடும் எளியமக்கள் ,ஆதரவற்றோருக்காக உணவளிக்க நிதி திரட்ட மற்றொரு சைக்கிள் ஓட்டுதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் .



இப்போது வரை தனது முந்தைய பயணங்களில், ரோஹன் பிலேம் சிங் சுமார் 17,000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஒட்டியுள்ளார் , இப்போது கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு சென்னை மற்றும் மும்பை வழியாக பயணித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார் .


இந்த சைக்கிள் பிரசாரம் குறித்து ரோஹன் பிலேம் சிங்;


'2018 ஆம் ஆண்டு முதல், 'மனிதநேயத்திற்கான சைக்கிள் ஓட்டுதல் 'முயற்சியின் கீழ் மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரசாரம் செய்ய  நான் இந்தியா முழுவதும் சைக்கிள் ஓட்டினேன் .நான் இப்போது ஏழு பயணங்களை முடித்துவிட்டேன்.தற்போது  8 வது பயணத்தில் இருக்கிறேன். எனது முந்தைய பயணங்களின் போது, ​​நாடு முழுவதும் 17,000 கிலோமீட்டர் தூரத்தை நான் சைக்கிள் ஓட்டி கடந்துளேன் .ஒவ்வொரு சைக்கிள் பயணமும் ஒரு காரணத்திற்காகவே இருந்தது .தற்போது, ​​என் எட்டாவது சைக்கிள் பயணத்தில் , ​​பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதை இலக்கு வைத்துள்ளேன் .ஆகவே, பசித்தோருக்கு உணவளிப்பதற்காக இந்த பிரச்சாரத்தைத் தொடங்க நான் முடிவு செய்துள்ளான். இப்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 முதல் 60 பேருக்கு உணவளிக்க முடிகிறது.

No comments:

Post a Comment