Featured post

Sathyabama Shines Bright with Unprecedented

"Sathyabama Shines Bright with Unprecedented Success in Placements!: Excellence Day 2024"* Sathyabama Institute of Science and Tec...

Tuesday 9 March 2021

முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள்

திரைப்பட பின்னணிப் பாடகர்

முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள்

இசையமைத்த

“இந்த மண் எங்களின் சொந்தமண்

மக்கள் இசைப்பாடல்கள் வெளியீட்டு விழா

தமிழ்மொழி பெருமை - தமிழர் பண்பாட்டுச் செழுமை – தமிழின உரிமை ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக,  செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) அவர்களின் தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்து திரைப்படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் – கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக் கவிஞர்கள் புதுவை இரத்தினதுரை, துளசிச்செல்வன், திருக்குமரன், அகதன் உள்ளிட்டோர் எழுதிய பாடல்களின் தொகுப்பான “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற மக்கள் இசைப் பாடல்களின் வெளியீட்டு விழா வரும் 13.03. 2021 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை – சாலிகிராமம் “பிரசாத்லேப்” நடைபெறுகிறது.







இந்நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் பாடல்களை வெளியிட்டு உரையாற்றுகிறார், இயக்குநர் சேரன், இயக்குநர் மு.களஞ்சியம், இயக்குநர் மணிமாறன், ஐயா கி. வெங்கட்ராமன் (இணையாசிரியர் – தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்) பேரா. கு.சின்னப்பன் (பதிவாளர் (பொ) தமிழ்ப்பல்கலைக்கழகம் – தஞ்சை) பேரா. பெ. கோவிந்தசாமி (கலைப்புலத்தலைவர், தமிழ்ப்பல்கலைக்கழகம்–தஞ்சை) கவிஞர் இளம்பிறை, கவிஞர் இளையகம்பன் தமிழீழக்கலைபண்பாட்டு முன்னாள் பொறுப்பாளர் தேவர் அண்ணா, எழுத்தாளர் விசவனூர் தளபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர் மேற்கொள்கிறார், கவிஞர் ஜே. தமிழ்ச்செல்வன் வரவேற்புரை யாற்றுகிறார் விழா நிறைவில் இசையமைப்பாளர் – திரைப்படப் பின்னணி பாடகர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி ஏற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் முழுநிலவன் நன்றி நவில்கிறார்!

இந்நிகழ்வில் திரைத்துறை சார்ந்தோர், ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்! அனைவரையும் செங்கோல் படைப்பகத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்!

4 comments:

  1. நீங்கள் இன்னும் பல பாடல்கள் பாடி

    சினிமா துறையில் நீங்கா இடம் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சுதன் அண்ணா... ஜெயமூர்த்தி அண்ணா

    ReplyDelete
  4. பாராட்டுக்குரிய உன்னதமான படைப்புக்கும் படைப்பாளிக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete