Featured post

Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released

 *'Makkal Selvan' Vijay Sethupathi's 'ACE' Glimpse Released* *Vijay Sethupathi Shines as 'Bold Kannan' in the Up...

Thursday, 15 December 2022

பத்திரிகைச் செய்தி - வானலைகளில் ஒரு வழிப்போக்கன் - புத்தக

 பத்திரிகைச் செய்தி - வானலைகளில் ஒரு வழிப்போக்கன் - புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி


பிரபல தொகுப்பாளரும், சர்வதேசளவில் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளருமான முனைவர் B.H.அப்துல் ஹமீத் அவர்களது வாழ்நாள் அனுபவங்களை உள்ளடக்கிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில், "பிளாக் ஷீப் டிவி" இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் புத்தக வெளியீடு நிகழ்ச்சி, டிசம்பர் 18 ஆம் தேதியன்று மாலை 05:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நிகழ உள்ளது.



அரை நூற்றாண்டு காலமாக நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்,  அறிவிப்பாளராகவும் கோலோச்சிய ஆளுமையான அப்துல் ஹமீது அய்யாவின் இந்தப்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் RJ விக்னேஷ்காந்த்.


மேலும், முந்தைய தலைமுறை மேதைகளைத் தேடி ஓடிக் கொண்டாடி மகிழும் பிளாக்‌ஷிப் டிவி நிறுவனம்,

இந்த நிகழ்ச்சியின் தலைமை நல்கையாளராக (Title Sponsorship), பொறுப்பேற்றுக் கொண்டு, தன்னையும் இந்த வரலாற்றுப் பதிவில் இணைத்துக் கொண்டுள்ளது என்பதையும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 


முறையே இந்த கான்சர்ட் (concert) மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு முடிந்ததுமே, இதன் ஒளிபரப்பு, பிளாக் ஷீப் டிவி அலைவரிசையிலும், பிஎஸ் வேல்யூ ஓடிடி (BS Value OTT) தளத்திலும் விரைவில் பதிவேற்றப்படும்.

No comments:

Post a Comment